அகப்படவில்லையா
படிக்கிறமாதிரியெதுவும்
முடித்துவிட்டானா ஏற்கனவே
இருக்கிறதனைத்தையும்
அல்லது இதுதானா
அவனது குணமே
எதுவானால் என்ன
நிம்மதியை வைத்துவிட்டுப் போயிருக்கிறான்
புரட்டிக் கொண்டிருந்தபுத்தகங்களில் எதையும்
சுட்டெடுத்துப் போகாத புத்தன்
Published on January 24, 2024 20:57