உன்மத்த ஸ்பரிசம் – ஸ்ரீ முடிவற்ற நீள் பாதையில் போவதும் வருவதுமாக இருந்திருக்கிறேன் காலத்தைத் தொலைத்தபடி சினந்து சுயமிழந்த சந்தர்ப்பங்களில் இசையெனும் கருங்கடலின் ஓங்காரத்தில் பித்துப் பிடித்து மூழ்கித் தொலைந்திருந்த வேளைகளில் கடந்த நூற்றுப் பதினாறு நிமிடங்களாக இசையில் தொலைந்து கொண்டிருக்கவும் இல்லை சீற்றத்தில் பற்றி எரிந்து கொண்டிருக்கவும் இல்லை உன்னோடு பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தவுடன் கால்கள் நிற்கவில்லை வலியில் கெஞ்சவும் இல்லை நிற்பதற்கான எந்தவொரு சமிக்ஞையும் இல்லை அம்மீச்சிறு உன்மத்த கணத்தை அடைவதற்காக தன்வயமற்றுப் போயிருந்திருக்கிறேன் ...
Read more
Published on January 19, 2024 03:06