57 56

வேண்டாம் ஸ்டாலின் சார்

 

அன்பின் ஸ்டாலின் சார், வணக்கம்போக்குவரத்துத் தொழிலாளிகள் போராடிக்கொண்டு இருக்கிறார்கள்புதியக் கோரிக்கைகள் எதுவும் இல்லைதங்களது பணத்தைத் தரச் சொல்லிக் கேட்கிறார்கள்துயரம் என்னவெனில்இந்த வலியை நன்கு உணர்ந்த நீங்கள்இந்த வலிக்கான நிவாரணம் கேட்டு குரல் குடுத்த நீங்கள்அவர்களது வலியை உதாசீனப்படுத்துவதுதான்இப்போதும்கூட தோழர் அ.சவுந்தரராஜன் சொன்னதுதான் இது எங்களது அரசுதான்உங்களுக்கும் புரியும்எங்களது அரசானாலும் அதனோடும் தொழிலாளிகளின் நியாயத்திற்காக மல்லுக்கட்டவே செய்வோம்நீங்கள் கேட்டுக் கொண்டால் பகலிலும் ஆம்னி பேருந்துகளை இயக்கத் தயாராக இருப்பதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கூறியிருக்கிறார்கள்போராடிக்கொண்டிருக்கும் தொழிலாளிகளுக்கு எதிராகஆளும் வர்க்கத்திற்கு ஆதாரவாக முதாலித்துவம் அதன் தொழிலாளிகளைக் கொண்டே உதவும்கவனமாக இருங்கள்உங்களுக்கும் மக்களுக்கும் ஒன்று சொல்வேன்இடர் காலங்களில் ஆம்னி பேருந்துகள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஓடிப் பதுங்கும்அப்போதும் மக்களுக்காகவும்இடர்மிகும் காலத்தில் அரசின் பணிகளுக்கு உதவிடும் வகையிலும்முழங்கால்த் தண்ணீர் பள்ளிக்கரனையிலும் இப்போது போராடிக்கொண்டு இருக்கும் தொழிலாளிகள் பேருந்துகளை இயக்குவார்கள்இவர்கள் உங்கள் அரசின் தொழிலாளர்கள் ஸ்டாலின் சார்2003 என்று பார்க்கிறேன்ஆணவத்தின் உச்சியில் ஜெயலலிதா அம்மையார்போராடிக்கொண்டிருந்த அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஆதரவாக CITU தொழிலாளர்கள் ஒரு போஸ்டர் வைத்தார்கள்“திருட்டுக் கொடுத்தவன்திரும்பக் கேட்கிறான்திருடியவன் சொல்கிறான்யூ ஆர் அண்டர் அரஸ்ட்”அப்போது இதை கூட்டம் கூட்டமாக இதைப் பேசுவேன்திமுக தோழர்கள் கொண்டாடுவார்கள்வேண்டாம் ஸ்டாலின் சார்அழைத்துப் பேசுங்கள்நன்றிஅன்புடன்,இரா.எட்வின்10.01.2024
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 10, 2024 06:35
No comments have been added yet.


இரா. எட்வின் [R.Edwin]'s Blog

இரா. எட்வின் [R.Edwin]
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.