ஷீனாவிற்கு சுடி எடுப்பதற்காக நானும் கீர்த்தியும் சென்றிருந்தோம்சன்ன நடுத்தரக் குடும்பம் ஒன்று திருமணத்திற்கு துணி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்மகளுக்கு போலும்அந்த மனிதரின் முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சிதிடிரென்று பொடிசு ஒருத்தி செல்லோடு அவரிடம் ஓடி வருகிறாள்”அப்பா அண்ணன்”புடிங்கி காதில் வைத்தவர்,சாப்ட்டியாப்பாநெகிழ்கிறேன்அது வீடியோ கால்பார்த்துட்டே பேசுங்க சார் என்கிறேன் அவர் என் இனம்போலகாதுல வச்சாலே சரியா கேக்காதுங்களே என்கிறார்நான் பேசியது அந்தப் பிள்ளைக்கு கேட்டிருக்கும்போலயாராச்சும் வந்தா அப்பாக்கு நல்ல ஹெட்போன் அனுப்பனுங்க சார். பாத்துக்கிட்டே பேசுவார்லஇல்லப்பா, அதுக்கு மிசினே வாங்கித் தந்துடலாம்லசெவுட்டு மிசின்ங்களா. வெளியத் தெரியுமேதெரியாதுப்பா என்று சொல்லிவிட்டு காதுக்குள் இருந்த என் மிசின்களை எடுத்துக் காட்டுகிறேன்நீங்களும் செவிட்டு மிசின் வச்சிருக்கீங்களா?ஆமாம்பாஎவ்வளவு ஆகுங்கசொல்கிறேன்வரப்ப வாங்கித் தரனும். பாத்துட்டே பேசலாம்லகொஞ்சமும் போலி இல்லைஅன்புஅன்புஇப்படியே இருங்கப்பாவேறென்ன சொல்ல
Published on December 31, 2023 03:17