அன்பிற்குரிய திரு ராஜ்நாத்சிங் அவர்களுக்கு,வணக்கம்நீங்கள் ஏதோ ஒரு நிகழ்ச்சியின் பொருட்டு சென்னைக்கு வந்து சென்றிருக்கிறீர்கள் என்றும்
சென்றவுடன்உங்களது X தளத்தில்பாரதக் கலாச்சாரத்தின் கோட்டையாக தென்னிந்தியா விளங்குவதாக மகிழ்ச்சி பொங்க பதிவு செய்துள்ளதாக அறிகிறேன்அதுகுறித்து சொல்வதற்கு கொஞ்சம் இருக்கின்றன”பாரதக் கலாச்சாரம்” என்கிறீர்கள்ஒரு வார்த்தை விட்டு “தென்னிந்தியா” என்கிறீர்கள்ஒன்று புரிகிறதுஎங்கள் பூமி பாரதமாக இல்லைஇதை சொல்கிறபோதே இன்னொன்றையும் சொல்லிவிட வேண்டும்பாரதத்தோடும் எங்களுக்கு எந்த முரண்பாடும் இல்லைஒன்றுபட்ட இந்தியாவின் ஒரு பகுதியாகத்தான் தமிழ்நாட்டை உள்ளடக்கிய தென்னிந்தியா எப்போதும் இருக்கும்இப்படியே இருக்கட்டும் என்று விட்டு விடுவதுதான் அறம்நீங்களே சொல்கிறீர்கள்,தென்னிந்தியா என்பது பாரதக் கலாச்சாரத்தின் கோட்டை என்றுஎங்கள் கலாச்சாரம்தான் பாரதத்தின் கலாச்சாரம் என்று தாங்கள் கூறுவது உண்மையானால்,வித்தியாசங்களைக் கொண்டாடும் எங்கள் கலாச்சாரத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்அப்படி எல்லாம் இல்லைஅந்தப் பதிவு வெறும் நடிப்பு என்றால் சொல்ல ஒன்றுண்டு எம்மிடம்,உங்கள் பாச்சா ஒருபோதும் இங்கு வேகாதுஅன்புடன்,இரா.எட்வின்15.12.2023இரவு 10.25All reactions
Published on December 22, 2023 01:47