1 அது மட்டும் தயைகூர்ந்து வேண்டாம் என்று திரும்பத் திரும்ப நினைத்துக் கொண்டிருக்கும் போதே அந்தக் காட்சி விரிந்தது. அகலமான ஷிபுயா கிராஸிங். ஷிபுயா ரயில்நிலையத்தை விட்டு வெளியே வந்தவுடன் எதிரில் குறுக்கும் நெடுக்குமாக ஐந்து மிகப்பெரிய நடைபாதைகள். எதிரில் மிகப்பெரிய திரைகளில் கார்ட்டூன் ஓடிக்கொண்டிருந்தது. திரையின் ஓரத்தில் 7.30 என்று கடிகாரம் மணி காட்டியது. பச்சை விளக்கு எரிந்ததும் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும், கறுப்பு கோட்சூட், வெள்ளை சட்டை அணிந்து தோளில் தொங்கும் அலுவலகப் ...
Read more
Published on September 19, 2023 06:59