மதம் மாறுவதைப் போலவே இதையும் கொள்வதெனில் ,
சாதி மாறுவதை அங்கீகரித்து சட்டம் இயற்ற வேண்டும் என்கிறார் கவிஞர் வைரமுத்து
தூங்குகிற ஸ்டாலின் சாரை அலைபேசியில் அழைத்து உரையாடக் கூடிய உரிமை உள்ளவர் கவிஞர் என்பது உலகறிந்த உண்மைஅப்படி இருக்கும் போது இவ்வளவு சென்சிட்டிவான ஒரு விசயத்தை நாங்குநேரி சம்பவம் மாதிரி ஒன்று நிகழ்ந்தேறியுள்ள நேரத்தில் சமூக வலைதளத்தில் பதிய வேண்டிய அவசியம் என்ன?இதுவும் ஒரு வகை அரசியல்அப்படி ஒரு சட்டம் வருவதாகவே கொள்வோம்ஒரு பட்டியல் இனத்தவர் அய்யராக மாற விரும்புகிறார்அவரை அய்யர் என்று யார் அங்கீகரிப்பதுஒரு இந்து கிறிஸ்தவராக மாறுவது என்றால் அவர் ஏதோ ஒரு தேவாலயத்திற்கு செல்ல வேண்டும்அங்கு அந்த தேவாலயத்தின் தலைவர் அதாவது அந்தத் திருச்சபையின் குருமார் அவரை கிறிஸ்தவராக ஏற்பார்ஒரு கிறிஸ்தவர் இந்துவாக மாறுவது என்றால் அவர் ஒரு ஏதேனும் ஒரு திருமடத்திற்கு சென்று அந்த மடத்தின் அதிபதியை அல்லது குருமகா சன்னிதானத்தை சந்தித்து தன் விருப்பத்தைக் கூறினால்முறைப்படி அந்த குரு இவரை இந்துவாக அங்கீகரிப்பார்இஸ்லாத்திற்கும் இதே வழிமுறைதான்இப்படி மதம் மாறியவர்கள் அதற்கான சான்றுகளோடு அரசு இதழிலில் அதை வெளியிட்டு தங்களது மதமாற்றத்தை உறுதி செய்ய வேண்டும்இப்போது சாதிக்கு வருவோம்சாதி மாற விரும்பிய ஒரு பட்டியை இனத்தவரை யார் அய்யராக ஏற்பது?மதம் மாறுவதைப் போலவே இதையும் கொள்வதெனில் ,கவிஞர் அப்படித்தான் சொல்கிறார்அய்யர் பட்டியல் இனத்தவரை அய்யர் ஒருவர் அய்யர் என அங்கீகரிக்க வேண்டும்அல்லதுஒரு செட்டியார் பிள்ளையாக மாறுவதெனில் எந்தப் பிள்ளையேனும் ஏற்பாராஇல்லை இவை எல்லாம் வைரமுத்துவிற்குத் தெரியாதா?தெரியும் என்பதுதான் அரசியல்கொதிநிலை உச்சத்தில் சாதியே இல்லை என்று சட்டம் இயற்றுங்கள் என்றும்சாதியற்ற சுடுகாடு என்று சட்டம் இயற்றுங்கள் என்றும்கொதிநிலை வரும்வரும் என்பது கவிஞருக்கும் தெரியும்அதுதான்,சன்னமாக மடைமாற்றுகிற காரியம் இதுஅவர் சொல்ல வருவதும்நாம் புரிந்துகொள்ள வேண்டியதும் இதுதான்சாதி இருக்கட்டும் என்கிறார்
Published on August 16, 2023 06:04
No comments have been added yet.
இரா. எட்வின் [R.Edwin]'s Blog
- இரா. எட்வின் [R.Edwin]'s profile
- 1 follower
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.
![Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.](https://s.gr-assets.com/assets/links/rss-d17345b73ab0388f7a23933239a75efb.gif)