நயநதினி திடீரென்று “உன்னுடைய மார்ஜினல் மேன் நாவலைப் படித்திருக்கிறேன்” என்றாள். இலங்கையில் என் ஆங்கில நூல்கள் கிடைக்க வாய்ப்பு இல்லையே எனக் குழம்பினேன். அடிப் பாவி, ஏன் இதை நீ முன்பே சொல்லவில்லை? இப்போதுதானே படித்தேன்? ஆமாம், உனக்குப் புத்தகம் எங்கிருந்து கிடைத்தது? இப்போதுதானே நானே என் பதிப்பாளர் நண்பரிடமிருந்து உனக்கான ஒரு பிரதியை வாங்கி வைத்திருக்கிறேன். இதற்குப் பதில் இல்லை. நானும் எதையும் ஒரு தடவைக்கு மேல் கேட்பதில்லை. ஆனால் நாவலுக்கு உள்ளேயிருந்து பல விஷயங்களைப் பேசினாள். ...
Read more
Published on June 07, 2023 08:00