ப்ரியமுள்ள சாருவிற்கு, நாவலின் மென்பிரதி கிடைத்தது. வாசிக்கத் துவங்கி விட்டேன். வழக்கத்தை விட வேகமான நடை , சொல்முறையில் நளினம் கூடி இருக்கிறது.இந்திய குடும்ப அமைப்புகளில் ‘அன்பு’ என்ற பெயரில் நிகழும் வன்முறை , அக்கறை என்ற மோஸ்தரில் நிகழ்த்தும் ஆதிக்கம் இவை யாவும்உருவாக்கும் உயர் அழுத்தம்,மனச்சிதிலங்கள். இதிலிருந்து வெளியேற எத்தனிக்கும் எளிய மனிதர்களின் சிக்கலான போராட்டம் மிக நுட்பமான உளவியல் பார்வையுடன் பதிவாகி இருக்கிறது. உணர்ச்சிகளின் சூதாட்டத்தில் கிரகங்களைப் பணயம் வைத்து ஆடும் கடவுளும் சாத்தானுமாய் பிரிந்து ...
Read more
Published on January 14, 2023 08:44