ஆசைக்கு எழுதி பார்த்தாயிற்று, இதோடு போதும் என்ற எண்ணத்துடன் எழுதிய மூன்றாவது நாவல் ‘பனி இரவும் தனி நிலவும்’. அதனாலேயே இதன் பக்கங்கள் அதிகம். அறிமுக எழுத்துக்குரிய போதாமைகளையும் கடந்து நிறைய வாசகர்களையும் விமர்சனங்களையும் பெற்றுத் தந்த கதை. நேற்று இந்நாவல் குறித்து மின்னஞ்சலில் வந்திருந்த கடிதம் கண்டு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. என்ன சொல்ல, நன்றியைத் தவிர. நன்றி தம்பி! 🙏🙏
Published on December 18, 2022 17:58