நீ யார் உன் பேரென்ன ஊரென்ன தேசமென்ன நீ படித்திருக்கிறாயா எத்தனை படித்தாய் உனக்கு மணமாகி விட்டதா எத்தனை குழந்தைகள் பாய் ஃரெண்ட் உண்டா உனக்கு எது எதெல்லாம் பிடிக்காது உனக்கு எது எதெல்லாம் பிடிக்கும் இது எதுவுமே எனக்குத் தெரியாது அதேபோல் உனக்கும் என்னைத் தெரியாது நீயும் நானும் ஒருவருக்கொருவர் அந்நியர்கள் இன்னும் கொஞ்ச நேரத்தில் பிரியப்போகிறோம் அதற்குப் பிறகு காலவெளியில் நாம் சந்திக்கும் வாய்ப்பே இல்லை ஆனாலும் பெண்ணே உன் ஸ்பரிஸம் பேரின்பத்தின் உச்சம் ...
Read more
Published on October 16, 2022 08:03