உச்சநீதிமன்றத்தின் GST குறித்த நேற்றைய நேற்றைய தீர்ப்பை நான் இப்படியாகப் புரிந்துகொண்டேன்
அதாவது,GST குழுவில் வைக்கப்படுகிற அல்லது ஏற்கப்படுகிற GST வரி குறித்த முடிவுகளை மாநில அரசுகளும் ஒன்றிய அரசும் தங்களின் அவைகளில் மசோதாவகக் கொண்டு வந்து நிறைவேற்றினால்தான் அது அமலுக்கு வரும்அத்தகைய முடிவுகள் மாநில அரசுகளை ஒருபோதும் கட்டுப்படுத்தாதுகுறிப்பாக 5 விழுக்காட்டில் இருந்து வரியை 12 விழுக்காட்டிற்கு மாற்றினால்அதை ஒன்றிய அரசு ஏற்றுக் கொண்டு சட்டமாக்கினாலும் சட்டமாக்கும் மாநிலங்களில் மட்டுமே அந்த உயர்வினை அமல்படுத்த முடியும்ஆனால் GST குழுவில் 5 விழுக்காட்டில் இருந்து 12 விழுக்காடு என்று ஒன்றிய அரசு சொன்னாலே போதும் மாநில அரசுகள் சட்டம் இயற்றாமலே அது அனைத்து மாநிலங்களிலும் அமலுக்கு வருகிறது அது எப்படி என்ற அய்யம் இயல்பாகவே வருகிறதுஇப்போது அதற்கான விடையினை மரியாதைக்குரிய பழனிவேல்ராஜன் அவர்களது க்ளிப்பிங் ஒன்றில் பார்க்க நேர்ந்ததுGST குழுவில் 5 விழுக்காட்டில் இருந்து 12 விழுக்காட்டிற்கு உயர்த்துவதாக சொல்லிவிட்டுமாநில அரசுகளின் மசோதாக்களுக்களைப் பற்றி பொருட் படுத்தாமல்GST வரி செலுத்துவதற்கான ஆன்லைன் செட் அப்பில் 12 விழுக்காடாக மாற்றிவிடுகிறார்கள்என்ன வகையான சுருட்டல் இது?
முகநூல்20.05.20221 comment
Published on June 03, 2022 09:01