ஆத்மார்த்தி – மந்திரமூர்த்தி அழகு – இரா.முருகன்
Manthiramoorthi Alagu
is with
Aathmaarthi RS
and ‘வாசிப்போம் தமிழ் இலக்கியம் வளர்ப்போம்’ குழுவின் சார்பாக நேற்று நடத்திய இணைய வழி கூகுள் மீட் இலக்கியச் சந்திப்பு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

எழுத்தாளர் இரா.முருகன் சிறுகதைகள் குறித்து எழுத்தாளர் ஆத்மார்த்தி அவர்கள்
அருமையாக ஆய்வு செய்து பேசினார். அவரது உரையானது எழுத்தாளர் இரா.முருகனின் படைப்புகளை அவர் எப்படி அணுகுகிறார் என்பது குறித்தும், தனக்கு முந்தைய எழுத்தாளர்களை இரா.முருகன் எப்படி அவரது பாணியில் தாண்டிச் செல்கிறார் என்பது குறித்தும் விளக்குவதாக அமைந்தது.நேற்றைய நிகழ்வில் நமது அழைப்பை ஏற்று சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் இரா. முருகன் அவர்களும் கலந்து கொண்டார். எழுத்தாளர்கள் பா.ராகவன், சு.வேணுகோபால், கண்மணி, ரமேஷ் கல்யாண் உள்ளிட்ட பல படைப்பாளிகளும், தேர்ந்த வாசகர்களும் நிகழ்வில் கணிசமாகப் பங்கேற்றுச் சிறப்பாக நடைபெறத் துணை நின்றார்கள்.ஆத்மார்த்தியின் ஆத்மார்த்தமான உரை எழுத்தாளர் இரா.முருகனின் படைப்புகளின் மீது புதிய வெளிச்சம் பாய்ச்சுவதாக அமைந்தது. இது தான் இந்த இலக்கியக் கூட்டங்களின் மூலமாக நாங்கள் சென்றடைய மனதார ஆசைப்பட்டது! இவை எல்லாம் நல்ல முறையில் நடப்பதற்குத் துணை நிற்கும் எழுத்தாள நண்பர் காளிப்ரசாத் உள்ளிட்ட அன்பு நண்பர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்!நிகழ்வு ஏற்பாடு செய்த வாசிப்போம் தமிழ் இலக்கியம் வளர்ப்போம் முகநூல் குழு மட்டுறுத்துநர் மந்திரமூர்த்தி அழகுக்கு நன்றிநிகழ்வைக் குறித்த லிங்க்:https://youtu.be/GziLcH7gCao

Published on March 14, 2022 00:41
No comments have been added yet.
இரா. முருகன்'s Blog
- இரா. முருகன்'s profile
- 25 followers
இரா. முருகன் isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

