கதைக்குள் செல்வதற்கு முன்னால் ப்ரஸன்னா பற்றி ஒரு வார்த்தை: இன்று காலை எழுந்து பூனைகளுக்கு உணவு கொடுத்து விட்டு, இரவு உறங்கச் செல்லுமுன் அணைத்து விட்டுப் போயிருந்த கைபேசியைத் திறந்தேன். ப்ரஸன்னாவின் கடிதம். கூடவே ஒரு கதையும் இருந்தது. நெடுங்கதை. எழுந்து இன்னும் பல் கூடத் துலக்கியிருக்கவில்லை. கதை அப்படியே என்னை உள்ளிழுத்துக் கொண்டது. ப்ரஸன்னாவை எனக்கு ஒரு வருடமாகத் தெரியும். ஆரம்பத்தில் என் கட்டுரைகளைக் கடுமையாக விமர்சித்து எழுதுவார். ஆனாலும் இவரிடம் ‘தீ’ இருக்கிறது என்பதை ...
Read more
Published on January 23, 2022 17:17