பல விஷயங்களில் நான் ஒரு ஐரோப்பியனைப் போல் யோசிப்பவன், வாழ்பவன் என்று சொன்னால் அது அவ்வளவாக யாருக்கும் புரிவதில்லை. சமயங்களில் என் மீது உண்மையான அக்கறையினால் சிலர் காட்டும் அன்பே எனக்கு வன்முறை போல் தோன்றுவதற்குக் காரணமும் இதுதான். “சாருவுக்கு வயசாய்டுச்சு, அவரை ரொம்பத் தொந்தரவு பண்ணாதீங்கப்பா” என்று யாரும் உண்மையான அக்கறையுடன் சொன்னால் எனக்கு அது என் மீது செலுத்தப்படும் உச்சக்கட்ட வன்முறை. கீழே உள்ள புகைப்படத்தையும் வசனத்தையும் பாருங்கள். நான் சொல்ல வருவது புரியும். ...
Read more
Published on January 21, 2022 20:36