அடுத்த ஒரு மணி நேரம் காளீஸ்வரன் சார் அல்ஜீப்ரா எடுக்க வந்து விடுவார். உலகத்திலேயே சிரிக்கத் தெரிந்த ஒரே கணக்கு வாத்தியார் காளீஸ்வரனாகத்தான் இருக்கும்.ஒரு மிரட்டல், உருட்டல், அடிதடி இல்லாமல், ராஜா இல்லையா, தங்கம் இல்லையா, படிடா தம்பி என்று செல்லமாகத் தட்டிக் கொடுத்தே கணக்கு விளக்கெண்ணெயை லிட்டர் கணக்கில் புகட்டி புத்திக்கு வலிமை தந்தவர் அவரே.என் ‘நெம்பர் 40, ரெட்டைத் தெரு; பயோபிக்ஷன் நூலில் திரு காளீஸ்வரன் பற்றி நான் எழுதியதுஒரு சகாப்தம் முடிவுக்கு வந்து விட்டது. ஓம் சாந்திதிரு காளீஸ்வரன் படம் உதவி – என் நண்பன் சுந்தர் என்ற
Srinivasa Raghavan S
Published on January 15, 2022 18:31