மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறது உசிலம்பட்டி

 அதே காரணத்திற்காக

மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறது உசிலம்பட்டிஆமாம்,பெண் சிசுக்கொலை செய்யப்பட்டிருப்பதற்கான அய்யக்குரல் அங்கிருந்து எழுந்திருக்கிறதுஉசிலம்பட்டி அருகில் உள்ள பெரிய கட்டளை கிராமத்தில் வசிக்கும் கௌசல்யா என்ற பெண்ணிற்கு சேடப்பட்டியில் உள்ள ஒரு மருத்துவமனையில் 21.12.2021 அன்று ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது26.12.2021 அன்று அந்தக் குழந்தை இறந்துள்ளதுமூச்சுத் திணறலால் இறந்ததாக சொல்லப்பட்டாலும்கௌசல்யாவிற்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளதால் சிசுக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று அய்யம் எழுந்திருக்கிறதுகௌசல்யாவும் அவரது கணவர் முத்துப்பாண்டியும் தலைமறைவாகியுள்ளது அய்யத்திற்கு மேலும் வலு சேர்க்கிறதுகுழந்தையின் சடலத்தை தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்ய சேடப்பட்டி வட்டாட்சியர் அனுமதித்திருப்பதாக 29.12.2021 தமிழ் இந்து சொல்கிறதுதமிழ்நாட்டில் 2016 -17 இல் 1000 ஆண்குழந்தைகளுக்கு 954 பெண் குழந்தைகள் என்றிருந்த பாலியல் விகிதாச்சாரம்2020 -21 இல் 1000 ற்கு 878 என்று குறைந்திருப்பதாக தேசியக் குடும்பநல கணாக்கெடுப்பு - 5 கூறுவதாக 19.12.2021 நாளிட்ட தமிழ் இந்து கூறுகிறதுஅந்தக் குழந்தையின் மரணம் இயற்காயானது என்று பரிசோசனை முடிவுகள் வரவேண்டும் என்று மனது கிடந்து தவிக்கிறதுஒருக்கால் மாறாக அய்யப்படுவதுபோல் அது சிசு கொலையாக இருக்குமானால் அது மிக மிக ஆபத்தானதுஇது எதிர்காலத்தில் ஆண் பெண் விகாதாச்சாரத்தில் பெரும் பாதிப்பை கொண்டு வரும்பெண்கள் குறைவாய் இருக்கும் சமூகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு குறையும்அது பாலியல் வன்முறைகளுக்கும் பெண் கொலைகளுக்கும் வழி வகுக்கும்வக்கிரமும் வறட்சியுமான ஒரு சமூகத்தை இது உருவாக்கும்எனவே அரசு பெண் சிசுக்கொலை மீண்டும் ஆரம்பித்துவிட்டதா என்பதைக் கண்டறிந்துகடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்#சாமங்கவிய 53 நிமிடங்கள்29.12.2021
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 29, 2021 10:07
No comments have been added yet.


இரா. எட்வின் [R.Edwin]'s Blog

இரா. எட்வின் [R.Edwin]
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.