தமிழ் இலக்கியத்துக்கு சாருவின் பங்களிப்பு அவர் தமிழில் புதுமைப்பித்தனுக்குப் பிறகு திடீரென்று நீண்ட காலம் தேங்கிவிட்ட இலக்கியத்தின் மொழி நடையை நவீனப்படுத்தியதே.இது ஒரு ஆச்சரியமான விஷயம்.பழைய மொழியை பழைய உள்ளடக்கத்தை எதிர்த்து எழுதிக்கொண்டிருந்தவர்களும் அதே மொழியில்தான் எழுதிக்கொண்டிருந்தார்கள்.உண்மையில் புதுமைப்பித்தன் ஏற்படுத்திய உடைப்புக்குப் பிறகு அதன் அதிர்ச்சியிலிருந்து மீள்வது போல தமிழ் இலக்கிய உலகம் நீண்ட காலத்துக்கு புதுமைப்பித்தனுக்கும் முந்திய மொழிக்குப் போய்விட்டது.இந்த வகையில் சாருதான் மீண்டும் இந்த இறுக்கத்தை உடைத்தவர் எனலாம்.தனிப்பட்ட பிரதிகளாக அவரது நாவல்கள் முழுமை ...
Read more
Published on December 23, 2021 02:36