போதி நிலா - சிறுகதை


எழுதிய முதல் சிறுகதை ’மண்குடம்’. பலரும் பாராட்டினார்கள். எழுத்தாளர்கள் கந்தர்வன், தனுஷ்கோடி ராமசாமி, மேலாண்மைப் பொன்னுச்சாமி, தமிழ்ச்செல்வன், எஸ்.வி.வேணுகோபால் போன்றவர்கள் உற்சாகப்படுத்தினார்கள். ‘இலக்கியச்சிந்தனை’ அமைப்பால் அந்த மாதத்தின் சிறந்த சிறுகதையாக தேர்ந்தெடுக்கப்பட்டது. கணையாழியின் கடைசிப் பக்கத்தில் எழுத்தாளர் சுஜாதா அந்தக் கதையைப் பாராட்டி எழுதி இருந்தார். கொஞ்சநாள் கிறுகிறுத்துத்தான் போனேன். 
’ஞானப்பால்’ சிறுகதையை எழுத்தாளர் ஜெயகாந்தன் ‘கவிதைபோலிருக்கிறது’ என பாராட்டியதும், மீனாட்சி புத்தக நிலையத்தால்வெளிவந்த ‘இராஜகுமாரன்’ சிறுகதைத் தொகுப்பிற்கு அவர்முன்னுரை எழுதியதும் என் எழுத்துக்களுக்குகிடைத்த பேறாகவும், பெரும்வாய்ப்பாகவும் இன்றும் நினைத்துக் கொள்வேன்.  
எழுத்தாளர்கள்ஜெயகாந்தன், இந்திரா பார்த்தசாரதி, ச.கந்தசாமி, பொன்னீலன் நிறைந்தசபையில் - தமிழ் சாகித்தியஅகாதமியில்– ‘உயிரோட்டம்’ கதையை வாசிக்கும்வாய்ப்பு கிடைத்தது. இந்திரா பார்த்தசாரதிபக்கத்தில் வந்து அந்தக்கதையைப் பற்றி சிலவார்த்தைகள் சொல்லி சிறப்பாகஇருந்ததாகச் சொன்னது முக்கிய தருணமாகநிலைபெற்றிருக்கிறது
ஆனால் தொடர்ந்து சிறுகதைகள்எழுதாமல் நின்று விட்டேன்.  
   1986 முதல்1999 வரை செம்மலர், குமுதம், இதயம்பேசுகிறது, விசை, விழுது, திருப்பரங்குன்றம் இலக்கிய மலரில் வெளிவந்தபதினைந்து கதைகளை வம்சிபதிப்பகத்தால் ‘போதி நிலா’ தொகுப்பாக வெளியிடப்பட்டது. அந்தத் தொகுப்பைஇப்போது அமேசானில் வெளியிடுகிறேன்.  

இதற்காக எழுத்துப் பிழைகள் சரிசெய்து கதைகளைத் திரும்பப்படிக்கிற போது – ஊரும், மனிதர்களும், அந்தக் காலத்தின்வாழ்வும் மட்டுமல்ல, என் எழுத்துக்களுமேஎனக்கு பிடிபட்டன. தொடர்ந்துகதைகள் எழுதத் தூண்டுகின்றன.    போதி நிலா சிறுகதையைஅமேசானில்  வாங்க, கிண்டிலில் படிக்க புத்தகத்தைகிளிக்குங்கள்:

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 04, 2021 07:26
No comments have been added yet.