எப்படி எழுதுவீர்கள், எழுதுவதற்கு எப்படிப்பட்ட சூழல் தேவை என்று பலமுறை என்னிடம் நண்பர்களும் வாசகர்களும் கேட்பதுண்டு. அதற்கு உண்மையிலேயே எனக்கு பதில் தெரியாது. ஆனால் ஒரு நாளில் எழுதத் தொடங்குவதற்கு முன் இப்படி ஏதாவது ஒரு பாடலைக் கேட்டு விட்டுத்தான் தொடங்குவேன். இம்மாதிரி இசைதான் எனக்குப் புத்துணர்ச்சி ஊட்டுகிறது. இன்று ஔரங்கசீப்பின் மூன்றாம் பாகத்தை அனுப்ப இருக்கிறேன். இப்போது நடப்பில் இருப்பது மூன்றாம் பாகம். இன்னும் ஒரு பாகம் இருக்கும். நாவலில் அப்படி நான் பாகம் பாகமாகப் ...
Read more
Published on October 18, 2021 21:54