பிஞ்ஜ் செயலி இருந்திராவிட்டால் நான் ராஜேஷ்குமாரைப் படித்திருக்க மாட்டேன். கைபேசியில் ஒரு குறியீட்டை அழுத்தினால் ராஜேஷ்குமாரைப் படித்து விட முடிகிறது என்ற அருகாமைதான் காரணம். இல்லாவிட்டால் கிண்டிலில் கூடத் தேடிப் போய் படித்திருக்க மாட்டேன்தான். இலக்கியத் துறையில் இன்னமும் ஜீவித்திருக்கக் கூடிய ஒருசில தீவிரவாதிகளில் நானும் ஒருவன் என்பதால் கைபேசியில் கிடைத்தாலும் படிக்கக் கூடிய ஆள் இல்லை நான். ஆனாலும் படித்ததற்குக் காரணம், வணிக எழுத்தில் அந்தப் பெயர் ஒரு சூப்பர் ஸ்டார் ரேஞ்ஜில் புழங்கி வருவதுதான். ...
Read more
Published on October 10, 2021 00:15