ஒரு சிறுபத்திரிகையைச் சேர்ந்த நண்பர். இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பழக்கம். பதினைந்து ஆண்டுகளாக அந்தப் பத்திரிகையை நடத்தி வருகிறார். கண்களில் ஒத்திக் கொள்வது போல் இருக்கும். எந்த கோஷ்டியையும் சேராதவர். எனக்குத் தொடர்ந்து தன் பத்திரிகையை அனுப்பி வருகிறார். அவருக்கு ஏதாவது கைம்மாறு செய்ய வேண்டுமே என்று பதினைந்து ஆண்டுகளாகவே யோசித்து வருகிறேன். கைம்மாறு என்ன கைம்மாறு? கைக்காசையும் நண்பர்களிடமிருந்து பணம் திரட்டியும் பத்திரிகை நடத்தி வருபவருக்கு ஒரே ஒரு தேவைதான் இருக்க முடியும். அந்தத் தேவையை ...
Read more
Published on September 13, 2021 01:55