மாறாக பள்ளிகள் குழந்தைகளிடம் போக வேண்டும்

 கிராமங்களில் தொடக்கப் பள்ளிகளைத் திறப்பதற்கு இயலுமா என்பதை ஆராயுமாறு சென்னை உயர்நீதி மன்றம் தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொண்டிருக்கிறது

சத்துணவு இல்லாமையால் குழந்தைகள் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக ஒருவர் நீதிமன்றத்தில் மனு கொடுத்திருப்பதாகத் தெரிகிறதுபள்ளிகள் இல்லாததால் குழந்தைகளைக் கடத்தியோ அல்லது பெற்றோரின் சம்மதத்தோடோ வேலைகளில் அமர்த்தப்படுவதாகவும் செய்திகள் வருகின்றனநிறைய குழந்தைத் திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளன.எனில்,அனைத்து தடுப்பரண்களையும் கடந்து சில திருமணங்கள் நடந்திருக்கவும் கூடும் இவை அனைத்தும் பள்ளிகள் உடனடியாகத் திறக்கப்பட வேண்டும் என்பதை உணர்த்துகின்றனபிள்ளைகள் இல்லாத பள்ளிகளில் எத்தனைக் காலம்தான் காலை முதல் மாலை வரை வேலை பார்ப்பது?எங்களுக்கும் பள்ளிகளைத் திறக்க வேண்டும்பிள்ளைகளின் இரைச்சலைக் கேட்காத எங்கள் செவிகளும் “டேய் என்ன அங்க சத்தம்” என்று சொல்லாத எங்கள் குரலும் அய்யோ என்று போகட்டும்ஆனால் குறைந்துகொண்டே வந்த தொற்றின் எண்ணிக்கை இன்று சன்னமாகக் கூடியிருப்பதாக பத்திரிக்கையாளர் குணசேகரன் எச்சரிக்கிறார்சென்னையில் நேற்று 122இன்று 164கோவையில் நேற்று 164இன்று 179நேற்றுவரை இறங்குமுகம். இன்று மீண்டும் ஏறத் தொடங்கி இருக்கிறதுமூன்றாம் அலை இன்னும் மோசமாகும் என்றும் செய்திகள் வருகின்றனகுழந்தைகளின் பிறப்பு விகிதம் மூன்றில் இரண்டு பங்காகக் குறைதுள்ளதாக ஒரு தகவல் இருக்கிறதுமரண விகிதம் அதிகரித்திருக்கிறதுதமிழ் நாட்டில் மக்கள் தொகை குறைந்து வருவதாகவும்எனவே தமிழ் மக்கள் குடும்பக்கட்டுப்பாட்டைத் தவிர்க்க வேண்டும் என்றும்வேறு ஒரு காரணத்திற்காக அவர் சொல்லி இருந்தாலும் தோழர் மணியரசனின் இந்தத் தகவலும் அச்சமளிப்பதாகவே உள்ளதுஇந்த நிலையில் குழந்தைகள் கூடிவேறு மாதிரி ஆனால்வேண்டாம் அந்தச் சிந்தனைக்குள் போகவே வேண்டாம் குழந்தைகள்,பட்டினியில் வாடக் கூடாதுவேலை வாங்கப்படக் கூடாதுகுழந்தைத் திருமணங்கள் நடக்க கூடாதுகல்வியும் அவர்களுக்குப் போக வேண்டும்அது எப்படி?பள்ளிகளும் திறக்கப்படாமல் இத்தனையையும் சாத்திய படுத்துவது?அது நமது வேலைசாத்தியப் படுத்த என்ன செய்யலாம் என்று கூடிப் பேச வேண்டும்மார்த்தி சொன்னதில் ஒன்று சொல்கிறேன்சொல்வார்,INSTEAD THE SCHOOL SHOULD GO TO THE STUDENTS"இப்படிப் பெயர்க்கலாம்,குழந்தைகள் பள்ளிக்கு வருவதற்கு மாறாக பள்ளிகள் குழந்தைகளிடம் போக வேண்டும்இந்தக் காலத்திற்கு ஏற்றார்போல் சொல்வதெனில்கொரோனா முற்றாய் முடியும்வரை மாணவர்கள் பள்ளிகளுக்கு வருவதற்கு பதில் பள்ளிகளை மாணவர்களை நோக்கி நகர்த்துவோம்எப்படி?சத்தியமாய் இந்தப் புள்ளியில் என்னிடம் ஏதும் இல்லைஆனால் உட்கார்ந்து இதுகுறித்து அக்கறையோடு உரையாடும்போதுஎன்னிடம் இருந்தும் கருத்துக் கிடைக்கும்உங்களிடம் இருந்தும் கிடைக்கும்யோசிப்போம்#சாமங்கவிய ஒருமணி பன்னிரண்டு நிமிடம்28.07.2021
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 28, 2021 10:23
No comments have been added yet.


இரா. எட்வின் [R.Edwin]'s Blog

இரா. எட்வின் [R.Edwin]
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.