திரு ஸ்டாலின் அமைத்திருக்கும் பொருளாதார ஆலோசனைக் குழு

முதலில் திரு ஸ்டாலினுக்கு என் வாழ்த்துகள் உரித்தாகின்றன. சமூகநீதி நாடகத்தை விட தமிழகத்தின் சரிந்து கொண்டிருக்கும் பொருளாதாரத்தைத் தூக்கிப் பிடித்து நிறுத்துவதுதான் முக்கியம் என்ற நிலைப்பாட்டிலிருந்து அவர் எடுத்திருக்கும் முடிவு மிகவும் சரியானது. பொருளாதாரம் சரியாகும் போது சமூகநீதியின் அடித்தளம் நிச்சயம் வலுப்பெறும். உடனடியான சமூகநீதிச் செயற்பாடுகள் ஏதும் மிகப் பெரிதாக நடக்க எந்த சாத்தியமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

திரு அரவிந்த் சுப்ரமணியம் தொற்றுக்கு முன்னாலேயே இந்தியப் பொருளாதாரத்தின் நிலைமை சரியில்லை என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகிறார். அவர் சொல்வது உண்மையும் கூட. தமிழ்நாடு இந்தியாவிலிருந்து விதிவிலக்கல்ல. தமிழ்நாட்டின் பொருளாதாரத் தடுமாற்றத்திற்கு திமுகவும் அதற்கு ஆலோசனை கொடுத்துக் கொண்டிருந்த திராவிட முழு முட்டாள்களும் நிச்சயம் பத்து சதவீதமாவது பொறுப்பேற்க வேண்டும். மத்திய அரசு கொண்டு வந்த எல்லாத் திட்டங்களையும் கண்ணை மூடி எதிர்ப்பதுதான் அவர்கள் வேலையாக இருந்தது. மத்திய அரசு எதிர்ப்பையே தூக்கிப் பிடித்துக் கொண்டு வெற்றி பெற்ற பிறகு மத்திய அரசின் ஒத்துழைப்பை அளவிற்கு அதிகமாக எதிர்பார்ப்பது சரியாக இருக்காது. மேலும் வருங்கால நோபல் பரிசு பெறக் கூடிய பொருளாதாரப் பெரும்புலி திரு தியாகராஜன் நேற்று வரை காற்றில் வாளைச் சுற்றிக் கொண்டிருந்தார் என்ற செய்தி மத்திய அரசிற்குச் செல்லாமல் இருக்காது.

திரு சுப்ரமணியம் இந்தியாவைக் குறித்துச் சொன்னது இது: . The underlying primary deficit of the Centre and states combined is typically about 3 per cent of GDP (including about 1 percentage point in debt increases from recapitalising banks and assuming public enterprise debt). So, shifting the primary balance into a modest surplus would require an adjustment of 4 percentage points of GDP. But non-interest expenditure is only roughly 20 per cent of GDP. Consequently, if tax increases were ruled out, then a sudden adjustment would require non-interest spending to be cut by no less than 20 per cent (4 divided by 20 times 100). Clearly, this would be politically impossible.

தமிழகத்தைப் பொறுத்தவரை பற்றாக்குறை ஜிடிபியில் 5%. சென்ற வருடம் எல்லா மாநிலங்களிலும் அதிகக் கடன் வாங்கிய மாநிலம் தமிழ் நாடு. இந்தியாவைப் பொறுத்தவரை அதன் கடன் சுமை ஜிடிபியில் 90%. தமிழகத்தைப் பொறுத்தவரை அது வாங்கியிருக்கும் கடன் தமிழக ஜிடிபியில் 23%.

அரசு கட்டுமானப் பணிகளுக்குச் செலவிடுவதை விட மிக அதிகமாக அரசு ஊழியர்களின் சம்பளம் ஓய்வூதியம் போன்றவற்றிற்கும், மக்களுக்கு இலவசங்களை வழங்குவதற்கும் செலவிட்டுக் கொண்டிருக்கிறது. மத்திய அரசாவது ரகுராம் ராஜன் பரிந்துரை செய்தது போல கரன்சி நோட்டுகளை அச்சிடலாம. அந்த சாத்தியம் தமிழக அரசிற்குக் கிடையாது. அதிக வரி வசூலிக்கும் வழியும் ஏறத்தாழ அடைக்கப்பட்டு விட்டது. தமிழத்தின் கடன் சுமையும் வருடத்திற்கு 30% வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதை நாம் மறந்து விடக் கூடாது. மிக அதிக வட்டி வீதத்தில் (8%) அரசு கடன் வாங்கிக் கொண்டிருக்கிறது.

எனவே மக்கள் மீது வரிச்சுமையை அதிகரிக்காமல், அரசு ஊழியர்களுக்கு சம்பளமும் கொடுத்து, ஓய்வூதியமும் கொடுத்து சமூகநலத் திட்டங்களையோ, கட்டமைப்புத் திட்டங்களையோ நடைமுறைப் படுத்துவது கடினமான வேலை. ஆனால் இக்கடினமான வேலையை இக்குழுவினால் செய்ய முடியாவிட்டால் யாராலும் செய்ய முடியாது.

பொறுத்திருந்து பார்க்கலாம்.

..

=cppst

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 21, 2021 04:24
No comments have been added yet.


P.A. Krishnan's Blog

P.A. Krishnan
P.A. Krishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow P.A. Krishnan's blog with rss.