01
அறைக்குள் நுழைந்திருக்கும்
இந்தப் பிடிச்சப்பிடி மென் குளிரைசமாளித்து விடலாம்வாசிக்கிற சூடில் ஒருதுண்டு கவிதையும்ஒரு கோப்பைசர்க்கரைப் போடாத பாலற்ற எலுமிச்சைத் தேநீரும்வாய்த்து விட்டால்
02
தன் இருத்தலை நிறுவ ஒரே ஒரு சொட்டேனும் இருட்டு தேவைப்படுகிறது வெளிச்சத்திற்கு
03
மலம் அள்ளுவதும்கீழிறங்கிசாக்கடை கசடள்ளி சுத்தம் செய்வதும்என்னை எரித்த பிறகும் தொடருமானால்இந்தக் கொடுமைக்கு எதிராகசாராய நெடியும் கோவமுமாய்கலந்து வரும்அவனது கெட்ட வார்த்தைகளாகவும்அவன் காறி உமிழும் எச்சிலாகவும்மாறியிருப்போம்என் கவிதைகளும் நானும்
Published on June 12, 2021 11:00