ஐந்தாண்டுகள் இருக்கும். “மகிழ் கவிதை மாதிரி அப்பப்போ நாலைஞ்சு வரி சொல்றான். இதை எப்படி எடுத்துக்குறதுன்னு தெரியலை” என்று மிகுந்த தயக்கத்துடன் சொன்னார் நண்பர் ஆசை. அப்போது மகிழுக்கு வயது நான்கு. குழந்தை மேதமையையும் பிரபல்யத்தையும் குழந்தைமைக்கான பெரும் சுமையாகக் கருதிவந்தவர் ஆசை என்பதால், மகிழ்ச்சியைவிடவும் குழப்பமே அவரைச் சூழ்ந்திருந்தது. “அது எப்படியோ, அவன் அவ்வப்போது சொல்வதைக் குறித்து வையுங்கள்” என்று சொன்னதை மட்டும் தவறாமல் செய்துவந்தார். குழந்தைமை மொழியே கவித்துமானது என்பது போக, குழந்தைகள் சில ...
Read more
Published on April 21, 2021 21:23