ஒரு மாபெரும் வேலை முடிந்தது. எக்ஸைல் நாவலின் பிழை திருத்தம் முடித்து விட்டேன். பிழை திருத்தம் மட்டும் அல்ல. எடிட்டிங். அதனால் கூர்ந்து வாசிக்க வேண்டியிருந்தது. பொதுவாக ஒரு படைப்பை எழுதி முடித்து விட்டு அதிலிருந்து நான் முற்றாக வெளியே வந்து விடுவேன். அதைத் திரும்பப் படிக்க நேர்ந்தால் அது நான் எழுதியது அல்ல. நான் அதன் வாசகன் மட்டுமே. அதுதான் எப்போதும் என் அனுபவம். பொதுவாக ஸீரோ டிகிரியைப் பலரும் சிலாகித்துப் பேசுவதைப் பார்க்கிறேன். அடிக்கடி ...
Read more
Published on March 15, 2021 10:25