காந்தியின் அஹிம்சைத் தத்துவத்தை குறைந்த பட்சம் அவரது சீடர்களாவது பின்பற்றினார்கள். ஆனால் அவர்களுக்கும் அவ்வப்போது அதில் சந்தேகம் வந்து விடும். ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் அஹிம்சையை எப்படிப் பிரயோகப்படுத்துவது என்பது குறித்த சந்தேகம். ஆள் ஆளுக்கு ஒரு யோசனை சொல்வார்கள். பிறகு எதிலுமே திருப்தி காணாமல் காந்தியையே நாடுவார்கள். அப்போது அவருக்கு வருத்தம் ஏற்படும். நான் போதிக்கும் தத்துவம் உங்கள் குருதி நாளங்களுக்குள் சென்றிருந்தால் இப்படி ஒவ்வொரு சந்தர்ப்பத்துக்கும் எப்படி ஹிம்சையைத் தவிர்த்து நடந்து கொள்வது என்று ...
Read more
Published on February 28, 2021 07:15