காலையிலிருந்து சீதா – ராமனின் திருக்கல்யாண வைபவத்தை விலாவாரியாக எழுதிக் கொண்டிருக்கிறேன். வெறுமனே எழுத முடியாது. தியாகராஜரின் உத்ஸவ ஸம்பிரதாயக் கீர்த்தனையான ஹெச்சககாவை பற்பல இசைக் கலைஞர்களும் பாடியிருப்பதைக் கேட்டேன். பாம்பே ஜெயஸ்ரீ, எம்.எஸ். மேலும் சிலரைக் கேட்டு சிறிதும் திருப்தி இல்லை. அரியக்குடியைக் கேட்கும் போது மட்டுமே கீர்த்தனையிலும் சங்கீதத்திலும் மனம் லயித்தது. வேறு யாரேனும் அரியக்குடியின் தரத்தில் பாடியிருந்தால் எனக்கு தயவுசெய்து தெரிவியுங்கள். (தம்பி வினித், சஞ்சய், டி.எம். கிருஷ்ணா என்று அனுப்பி வைத்து ...
Read more
Published on January 11, 2021 04:33