பிராமணர்கள் மற்றவர்களைப் படிக்க விடாமல் தடுத்தார்களா?
திராவிட நாசி இனவெறியர்கள் திரும்பத் திரும்பச் சொல்வது பிராமணர்கள் மற்றவர்களைப் படிக்கவிடாமல் தடுத்தார்கள் என்பது. இதை தமிழ்நாட்டின் சாபக்கேடான அரையணா அறிஞர்களும் திரும்பத் திரும்ப ஊடகங்களில் சொல்கிறார்கள். பெரியாரியத் தடித்தனத்தில் பிறந்த இவ்வாதத்திற்கு எந்த ஆதாரமும் கிடையாது.
டி
1. நம்முடைய நாட்டில் இதுவரை கிடைத்திருக்கும் ஓலைச் சுவடிகளில் மிகப்பல பௌத்தமதத்தையும் ஜைனமதத்தையும் சார்ந்தவை. இவற்றில் ஒன்று கூட பிராமணர்களால் எழுதப்பட்டது அல்ல.
2. வடமொழியின் மிகப்பெரிய புலவர்களில் பலர் பிராமணர்கள் அல்ல.
3. தமிழின் முப்பெரும் புலவர்களான இளங்கோவோ, வள்ளுவரோ, கம்பனோ பிராமணர் அல்ல.
4. “வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவன் அவன்கண் படுமே” இது சங்கப்பாடல்.
5. பிராமணர்களிடம் என்றும் அதிகாரம் இருந்ததில்லை. அவர்கள் மற்றவர்களைச் சார்ந்துதான் வாழ்க்கையை நடத்தியிருக்கிறார்கள்.
6. மெய்கண்ட தேவரோ, இராமலிங்க அடிகளாரோ பிராமணர் அல்லர்.
7. தமிழுக்கு இலக்கண நூற்களை எழுதியவர்களில் பலர் பிராமணர்கள் அல்லர்.
8. குறிப்பாக தமிழ்நாட்டை 1947க்கு முன் நானூறு ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்கள் ஆங்கிலேயர்கள் அல்லது இஸ்லாமியர்கள் (பெரும்பாலான பகுதிகளில்). இவர்களும் பிராமணர்களுடன் சேர்ந்து மற்றவர்களைத் தடுத்தார்களா?
9. இருமொழிகளில் புலமை பெற்று துபாஷிகளாக வேலைபார்த்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் பிராமணர்கள் அல்லர்- வெள்ளாளர்கள்.
.
10. வேதத்தை முதல் மூன்று வருணத்தவர்தாம் படிக்கலாம் என்ற விதி இருந்தது உண்மை. ஆனால் உபநிடதங்கள் 17ம் நூற்றாண்டிலேயே மொழிபெயர்க்கப்பட்டுவிட்டன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் வேதங்கள் மொழிபெயர்க்கப்பட்டு விட்டன.
11. வேதங்களில் சொல்லப்பட்டவை குப்பை என்பது பெரியாரிய நாசி இனவெறியர்களின் நிலைப்பாடு. குப்பையைப் படிக்க வேண்டாம் என்று பிராமணர்கள் சொன்னால் அதனால் இவர்களுக்கு எந்த விதத்தில் குறைபாடு?
12. இவர்கள் ஒரு முக்கியமான கேள்வியைக் கேட்க மறந்து விடுகிறார்கள். இஸ்லாமில் எல்லோரும் எல்லாவற்றையும் படிக்கலாம். எந்தத் தடையும் இல்லை. ஆனால் இஸ்லாமியர்களில் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் ஏன் அதிகம் இருக்கிறார்கள்? இன்றுவரை ஏன் இருக்கிறார்கள்? அவர்களைப் படிக்க விடாமல் தடை செய்தது பிராமணர்களா?
12. காரணம் மிக எளிமையானது. படிப்பின்மைக்கும் ஏழ்மைக்கும் இடையே தொடர்பு இருக்கிறது. ஆனால் தொழிற்புரட்சிக்கும் முன்னால் பணம் இருந்தவர்களும் படிக்க வேண்டும் என்ற நினைப்போடு இருந்ததாகத் தெரியவில்லை. ‘படித்து என் பையன் செய்யப்போகிறான்?’ என்ற கேள்வி எனக்குத் தெரிந்து கேட்கப்பட்டுக் கொண்டிருந்தது. பரவலான எழுத்தறிவினால் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும் என்ற உணர்வு வந்தது தொழிற்புரட்சிக்கு பின்னால்தான். இந்தியாவில் தொழிற்புரட்சியின் தாக்கம் மிகவும் பின்னால்தான் வந்தது. மேலைநாடுகளில் அதற்கு முன்னாலேயே மறுமலர்ச்சி ஏற்பட்டு விட்டது. அச்சிட்ட புத்தகங்கள் பரவலாகப் படிக்கப்பட்டது ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால். இந்தியாவில் அச்சிட்ட புத்தகங்கள் பரவலாகப் பதிக்கப்பட்டது பத்தொன்பதாம் நூற்றாண்டில். நம் மறுமலர்ச்சி அப்போதுதான் ஏற்பட்டது. படிப்பின் முக்கியத்துவம் நமக்குப் புரியத் துவங்கியது அப்போதுதான். அது முதலில் பிராமணர்களுக்குத் தெரிந்தது. அதனால் பிராமணர்களைக் கழுவில் ஏற்ற முடியாது.
13. கல்லூரிகளில் பிராமணர் அல்லாதவர் சேரக்கூடாது என்று எந்தத் தடையும் இல்லை. பிராமணர்கள் பலர் சேர்ந்தார்கள். படிப்பின் முக்கியத்தை அவர்கள் புரிந்து கொண்டதால் சேர்ந்தார்கள். நிலவுடமைச் சமூகத்திலிருந்து வெளியேறினால் முன்னேறலாம் என்ற எண்ணத்தில் சேர்ந்தார்கள். அவர்களுக்குப் படிப்பு இலவசமாக அளிக்கப்படவில்லை. நிலங்களை விற்றுத்தான் பிள்ளைகளைப் படிக்க வைத்தார்கள்.
14. பிராமணர்கள் நிலைமையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று நான் சொல்லமாட்டேன். நிச்சயம் பயன்படுத்திக் கொண்டார்கள். ஆனால் நிலைமை அவர்களால் உருவாக்கப்பட்டது அல்ல. மக்களாட்சி வந்தவுடன் நிலைமை சீரடைந்து விட்டது என்பதும் உண்மை. மக்களாட்சி வேண்டம் என்று சொல்லிக் கொண்டிருந்தவர் பெரியார் என்பதும் உண்மை.
திராவிட இயக்கம் ஓர் அப்பட்டமான நாசி இயக்கம். ஒரு சமூகத்தையே நூறு ஆண்டுகளாகச் சாடிக் கொண்டிருப்பதற்கு அசாத்தியமான அயோக்கியத்தனம் வேண்டும். தடித்தனம் வேண்டும். இவை திராவிட இயக்கத்திற்கு இன்றுவரை இருக்கின்றன.எந்தக் கூச்சமும் இல்லாமல் பெரியார் சொன்ன பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கும் இயக்கம் அது. அதை ஆதரிப்பவர்களில் பெரும்பாலானவர்களைச் சுரண்டிப் பார்த்தால் அவர்கள் நாசிகளாகத்தான் இருப்பார்கள் அல்லது பெரியார் திடலில் கூலி வேலை செய்பவர்களாக இருப்பார்கள் என்பதுதான் அவமானகரமான உண்மை.
P.A. Krishnan's Blog
- P.A. Krishnan's profile
- 17 followers
