ஆதி அந்தமில்லாத காலப்பெருவெளியின் இந்தவொரு புள்ளியில் நாம் சந்தித்தது சந்தர்ப்பவசமோ விதிவசமோ தெரியாது மனிதக் கணக்கில் இருபது ஆண்டுகள் ஒன்றாயிருந்தோம் சட்டென்று கரைந்து விட்டாய் காலத்தில் அநந்தகோடி ஒளிப்புள்ளிகளில் ஒன்றாகிவிட்ட உன்னையினி சந்திக்க இயலுமோ சந்தித்தாலும் ஞாபகமிருக்குமோ இந்த இருபது ஆண்டுகளில் நாம் பேசிய வார்த்தைகளும் பேசாத மௌனங்களும் கூடலும் ஆடலும் வெறுப்பின் வெம்மை படிந்த பகல்களும் மோகத்தீயில் பற்றியெரிந்த இரவுகளும் எனக்காக உன்னை உருக்கிக் கொண்டதும் தங்கக் கூண்டில் எனைச் சிறைப்படுத்திய உன் பிரியத்தின் கூர்முனைகளும் ...
Read more
Published on November 13, 2020 21:44