நூற்றாண்டுகளாய் நின்று கொண்டிருக்கிறேன் தனிமையும் சோர்வும் அயர்ச்சியும் விரக்தியும் கொண்டு. மழை கண்டேன் புயல் கண்டேன் அக்னியும் சுட்டெரித்தது சர்ப்பங்கள் ஊர்ந்து நெளிகின்றன நாய்கள் சிறுநீர் கழிக்கின்றன கல் கண்ணீர் விடுகிறதென வணங்க ஆரம்பித்ததொரு கூட்டம் கற்கள் மீது விரோதங் கொண்டவர்கள் மூளியாக்கினர் என்னை ஆனால் வர வேண்டியவனை இன்னும் காணோம்…
Published on November 07, 2020 08:38