எதிர்மறையான விஷயங்களை எழுதக் கூடாது என்று நினைத்தாலும் நடப்பது பெரும்பாலும் அப்படித்தான் இருக்கின்றன. நண்பரைப் பற்றிப் பாராட்டி எழுதி ஈரம் காயவில்லை; அதற்குள் அவர் வைரமுத்து போற்றி எழுதிவிட்டார். இங்கே பிரச்சினையே என்னவென்றால், சிறு பத்திரிகைகளில் 22 வயது இளைஞர்கள் முதல் சிறுகதை எழுதுவார்கள். அவர்களது பயிற்சி, புதுமைப்பித்தன், செல்லப்பா, க.நா.சு., சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், எம்.வி. வெங்கட்ராம், கு.ப.ரா., ந. பிச்சமூர்த்தி, தி. ஜானகிராமன், ஆதவன் என்று தொடங்கி வந்திருக்கும். இந்த முன்னோடிகளிடமிருந்து கற்ற பிறகு ...
Read more
Published on July 17, 2020 00:38