இதுவரை எனக்கு எத்தனையோ பேர் உதவியிருக்கிறார்கள். உதவிக் கொண்டும் இருக்கிறார்கள். உங்களின் உதவியினால்தான் என் ஜீவனோபாயமே நடந்து கொண்டிருக்கிறது. அதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம். இந்த அளவுக்கு ஒரு வாசகர் குழு ஒரு எழுத்தாளனை வாழ வைக்குமா என்று உலக சரித்திரத்திலேயே பார்க்க இயலாது என்றுதான் நினைக்கிறேன். ஆந்திரப் பிரதேசத்தில் ஒரு எழுத்தாளர் – பெயர் மறந்து விட்டது, சீனி சொன்னார் – அவர் புத்தகத்தை அவரேதான் வெளியிடுவாராம். விலை என்று எதுவும் இல்லை. நீங்கள் கொடுப்பதுதான். ...
Read more
Published on July 18, 2020 23:26