சங்கத் தமிழில் “சூர சம்ஹாரம்”
வாசகர்களுக்கு வணக்கம்!
[image error]பல மாதங்களாய், Dosa (எ) இந்த வீடு பூட்டியே கிடந்தது;
இன்று திறக்கிறேன் – முருகனை முன்னிட்டு!
ஆம்… இன்று, “கந்த சட்டி” (எ) சொல்லப்படும் நாள் (Nov 8-2013)
Dosa-வில் வரும் சில பதிவுகள், “தீவிர சமயப் பற்று” கொண்டவர்களுக்குப் பிடிக்கலை போலும்;
ஏகப்பட்ட குடைச்சல்கள் – இழிவு/இளக்காரங்கள்! அதனால் தான் பூட்டும் படி ஆயிற்று;
பல முறை சொன்னது தான்: இன்று வேறு, தொன்மம் வேறு!
இன்று இன்றாக இருக்கட்டும், தொன்மம் தொன்மமாக இருக்கட்டும் = இந்தப் புரிதலே போதும்!
உங்களுக்கு இன்னிக்கு பிடிச்சிருக்கு -ன்னு, தமிழ்த் தொன்மத்தில் தேடினா = இருக்காது:)
அதுக்காக, தொன்மத்தை மாற்றி எழுதவும் முடியாது;
“அறிவியல் பூர்வமான/ தரவுகள் சார்ந்த” = மனப் போக்கை நாம தான் வளர்த்துக் கொள்ளணும்:)
Dosa (எ) இந்தத் தளம்..
= நம்ம தமிழ்த் தொன்மத்தில், நம்ம இறை-இயல் வளர்ந்த பரிமாணம் எப்படி? -ன்னு “உண்மையாக” ஆய்வு செய்யும்![image error][image error]
= அன்றைய இயற்கை வழிபாடு vs இன்றைய புராண/ பரிகாரங்கள்
*மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர்,
*தமிழ்த் தென்றல் திரு.வி.க
= இவர்களின் ஆய்வு இதற்கு வழிகாட்டும்!
= இனி பதிவுகள், அவ்வப்போது வரும்:)
வாங்க, சூர சம்ஹாரத்துக்குப் போவோம் | கந்த “சஷ்டி” = சங்கத் தமிழ் விழா-வா?:)
= இல்லை!
முன்னர் வாசித்த பதிவுகளை ஞாபகம் வச்சிக்கோங்க!
*தமிழ்த் தொன்மத்தில், முருகன் = நம் ஆதிகுடித் தலைவன்; அவ்ளோ தான்!
*நடுகல், கந்து, கோட்டம், வேலன் வெறி
= இப்படித் தான் அவன் “இயற்கை வழிபாடு” | குடி காத்த முன்னோர் வணக்கம்
6 முகம், 12 கை, 18 கண் = இயற்கைக்கு மாறான புராணச் சங்கிலிகள், பின்னால் வந்தவை!
ஆதிகுடிகளின் முருகன் மேல் = புராணத்தையும் ஏத்திட்டதால்…
எது இருந்தது? எது வந்தது? -ன்னே கண்டுபுடிக்க முடியாதபடி, வடநெறிக் கலப்பு!
[image error]அப்போ சூரன்? மயில்? வேல்? காவடி?
*வேல் = குறிஞ்சி நில வேடுவர்களின் ஆயுதம்
*மயில் = முல்லை/ குறிஞ்சி நிலப் பறவை
*காவடி = மலை ஏற்றத்தில், எளிதாகப் பொருள் தூக்கிச் செல்லும் காத் தண்டு
அதான்… இது அத்தனையும்… அந்த நிலப் பெரியோனுக்கும் ஆகி வந்தது!(தேனும்/தினைமாவும் கூட)
இதுக்கு மேல, இதுல ஒரு “கதையும்” இல்ல! No Puranic Unbelievables:)
அப்போ சூரன்?????
அதைச் சொல்லுய்யா… சூரன் சூரன்?.. மாட்டிக்கிட்டியா ரவி?:)
சங்கத் தமிழில் “சூர்” உண்டு | ஆனா “சூரன்” இல்லை!
அந்த அக-நானூறு தான் இன்னிக்கி பாக்கப் போறோம்! Ok-vaa?:)
*காம வெறி புடிச்ச இந்திரன் = ரொம்ப நல்லவங்கோ!
*ஆனா அசுராள் மட்டும் = ரொம்ப கெட்டவங்கோ!
*முருகன், தேவாள் -க்கு Help பண்ணறத்துக்குன்னே, “தோன்றியவன்”
= இதெல்லாம் முதல்/இடைச் சங்கத் தமிழில் இல்லை:) | கலப்புக்கு பின்னரே, எழுதி எழுதிப் பரப்பப்பட்டது:))
வீர+பாகு | பாஹூ -ன்னா தோள்! (சம்ஸ்கிருதத்தில்)
“தமிழ்க் கடவுள்”-ன்னு சொல்லிக்கறோம் | ஆனா பேரு மட்டும் எப்படி “பாஹூ”?:)
= மனசாட்சியைத் தொறந்து வச்சீங்க-ன்னா ஒங்களுக்கே பதில் கிடைச்சீரும்;
சூர் = பயம்/துன்பம் | சூர் = கடவுள்
[image error]
Itz a “Native Land” Concept
துன்பத்தை/ பயத்தை உண்டாக்க வல்ல கடவுளே, அதைப் போக்கவும் வல்லது;
அந்த முன்னோர் நடுகல் வழிபாடே = முருக வழிபாடு!
நடுகல் = இறந்து போன முன்னோர் என்பதால், “ஆவியாய்” இறங்குவதாயும் முருகன் கற்பனை செய்து கொள்ளப்பட்டதுண்டு!
அப்போ மலை வாழ் மக்கள் எடுத்த ஆட்டம் தான் = சூர் இறக்குதல்/ வேலன் வெறி;
முருகனையே = “சூர்” -ன்னு சொல்லும் சில சங்கப் பாடல்கள்!
(சூர் மலை வெற்பன், சூர் மகளிர்-தெய்வப் பெண்கள்)
[image error]
வேலன் வெறியாடல்
“சூரன்” – அவன் தம்பிக்கு ஆட்டுத் தலை, சிங்கத் தலை – இதெல்லாம் புராண கப்சா!
“சூர்” – என்பதே தமிழ் மரபு | அது என்ன “சூர்” இறக்குதல்?
பொண்ணுக்குக் காதல் முத்திப் போச்சி; ஆனா வெளிப்படையா சொல்லப் பயப்படுறா;
அவ ஒடம்புல என்னென்னமோ மாற்றம் | இராத்திரி தனியாச் சந்திச்சிக்குறாங்க-ல்ல?:)
அம்மாவுக்கோ = பொண்ணு போக்கே புரியல!
என்னமோ ஏதோ? நம்ம குடி காத்த முன்னோரைக் கும்புடுவோம் -ன்னு பூசை வைக்குறா;
அப்போ, வேலன் (எ) பூசாரி வெறி ஆடுறான் = “சூர்” இறக்குறான்
ஆனா நம்ம பொண்ணு உள்ளுக்குள்ள சிரிச்சிக்குறா:))) | அட முட்டாப் பசங்களா, I am in Love with that Guy da!
பாக்கலாமா பாட்டை?
பாடல்: ஐங்குறுநூறு 249
கவிஞர்: கபிலர்
திணை: குறிஞ்சித் திணை
துறை: வேலன் வெறி
தோழி, தலைவி கிட்ட சொல்லுறா..
பெய்ம் மணல் வரைப்பின் கழங்கு படுத்து அன்னைக்கு
முருகென மொழியும் வேலன் மற்றவன்
வாழிய இலங்கும் அருவிச்
சூர்மலை நாடனை அறியா தோனே
காபி உறிஞ்சல்: (ரெண்டு ரெண்டு வரியா உறிஞ்சிக் குடிங்க, பார்ப்போம்:)
[image error]பெய்ம் மணல் வரைப்பின் = மணல் பரப்பி வச்சிருக்காங்க, வெறியாடும் முற்றத்தில்
கழங்கு படுத்து = கழங்கு -ன்னா, மஞ்சக் கழங்கு போல; மரத்தின் கிழங்கு
பூசைப் பொருளா, இதை வைக்குறது வழக்கம்; கூடவே தேன், தினை, கடம்ப மலர், காந்தள் பூ இதெல்லாம்;
கிடா வெட்டலும் உண்டு:)
அன்னைக்கு = அம்மாவுக்கு
முருகென மொழியும் வேலன் = உம் பொண்ணு மேல “சூர் இறங்கியுள்ளது”, நம்ம முன்னோர் தலைவன் முருகனே -ன்னு சொல்லுறான் வேலன் வெறி ஆடும் பூசாரி
மற்றவன் வாழிய = மற்று அவன் வாழி | நல்லா இருடே!
[image error]இலங்கும் அருவிச் சூர்மலை நாடனை = அருவி கொட்டுற, சூர் மலை நாடன் = பயம் தரும் மலைநாட்டுப் பையன்!
அவன் தான்டா எனக்குள்ள “இறங்கி”ட்டான்; ஏதோ சூர் “இறங்கி” இருக்காம்-ல்ல?
அறியா தோனே = அடேய் அறியாத பூசாரியே (-ன்னு தோழியிடம் சொல்லிச் சிரிக்குறா பொண்ணு:)
என்ன நீங்களும் சிரிக்கிறீங்களா? இதான் “சூர்” | சூர சம்ஹாரம் எல்லாம் ஒன்னுமில்லை:)
ஒவ்வோர் ஆண்டும், வடநாட்டில் தான் இராவணன் பொம்மை செஞ்சிக் கொளுத்துவாங்க;
அதே போல, தமிழ் நாட்டிலும் = “சூர சம்ஹாரம்” | கழுத்து வெட்டு:(
என்ன தான் “கதை”-ன்னாலும்,
Repeatedly beating & burning a Person/His Memory = Not a Human Value!
இது போன்ற “சம்பிரதாயங்கள்”, பின்னாள் தலைமுறையிலாச்சும் நின்று போகட்டும்!
சூரனைக் கொல்லலை = தன் மயில் வாகனமாய் ஆக்கிக்கிட்ட “கருணை”-ன்னு சொல்லுவாய்ங்க; Repeated Propaganda! அப்பறம் ஏன் கழுத்து வெட்டு? ஏன் அசுரர் “குடி கெடுத்த” ஐயா?
ஒரு பாவமும் அறியாத அந்த நாட்டு மக்கள்/ மொத்த இனத்தையே.. கடலில் மூழ்கடிச்சான் -ன்னு கந்த “புராணம்” சொல்லும்!
= இதுவா “கருணை”? | இல்லை, இது = “புராணம்”
[image error]முருகன் = நம்ம தமிழ்த் தொன்ம மூதாதை | கருணை-அழகன்
அவன் முகத்தைப் பாருங்க;
இதுவா “குடி கெடுக்கும்”?:(((
அவன் யார் குடியும் கெடுக்க மாட்டான்;
“அசுரர் குடிகெடுத்த ஐயா வருக“-ன்னு மட்டும் சொல்லாதீங்க!
*முருகனை = தமிழா வணங்கினா.. “இயற்கை வழிபாடு” மனசுக்குள் இறங்கும்!
*முருகனை = புராணமா வணங்கினா.. பரிகாரம்-தோஷம் ன்னு “சுயநலம்” தான் இறங்கும்!
உங்க மனசாட்சிக்கு எது? -ன்னு நீங்க தான் முடிவு பண்ணிக்கணும்!
தமிழ்த் தொன்ம முருகன் = சூர சம்ஹாரம் செய்ய மாட்டான்!
அவனே ஒரு “சூர்”
நம் “சூர்” (எ) மனத் துன்பத்தை இறக்குவான், இயற்கை வடிவினன்; அம்புடுதேன்!
dosa 109/365
Kannabiran Ravishankar's Blog
- Kannabiran Ravishankar's profile
- 16 followers
