மூன்று கோரிக்கைகள்
இன்றைய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் மூன்றுபேர் வைத்த கோரிக்கைகளில் இருந்த நியாயம் அவற்றை நண்பர்களிடம் கைமாற்றி வைக்க என்னைப் பணித்ததுதிருப்பூர் பின்னலாடை நிறுவன உரிமையாளார்களின் கூற்றுப்படி,கொரோனா காரணமாக ஏற்றுமதி செய்யப்பட்ட பின்னலாடைகள் பிரிக்கப்படாமலேயே அந்தந்த நாடுகளில் கிடக்கின்றனஅதனால் அதற்கான பணத்தைப் பெற இயலவில்லைஇதன் காரணமாக பெறப்பட்ட ஆர்டர்களுக்கான துணியை அனுப்ப முடியாமல் அவை இங்கேயே முடங்கிக் கிடக்கின்றனஇதனால் புதிய ஆர்டர்கள் ஏதுமில்லைஇந்த வகையில் ஏறத்தாழ ஒன்பதாயிரம் கோடி ரூபாய் முடங்கி இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்இதனால் தங்களது வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றுகூட கூறவில்லைசூழல் சற்று மாறும்வரை ஒரு மூன்று மாத காலங்களுக்கான EMI தொகையை மூன்று மாதத்திற்கு தள்ளி வைக்க வேண்டும் என்றும்இந்த மாத காலத்திற்கு வட்டியினை மட்டும் தள்ளுபடி செய்து தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்அடுத்து பின்னலாடைத் தொழிலாளிகள் கூறும்போதுதொழில் பாதிப்பின் காரணமாக தங்களது அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும்தங்களது உயிர்த்திருத்தலை சாத்தியமாக்கும் பொருட்டு வங்கிகளோ அல்லது வேறு ஏதேனும் நிறுவனங்களோ மாதா மாதம் பத்தாயிரம் ரூபாய் வீதம் மூன்று மாதங்களுக்கு வட்டியில்லா கடன் கொடுத்தால்நிலை மாறியதும் கடனைத் திருப்பி விடுவதாகவும் கோரினர்அடுத்ததாக நான் கேட்டது கண் பார்வையற்ற ஊதுபத்தி விற்கும் தம்பதியர்அவர்களது கோரிக்கையை கேட்க முடியாமல் அழுது விட்டேன்இவை போன்றவை பதட்டம் இல்லாமல் நிதானமிக்க சமூக வலைதள உரையாடல்களாக மாற வேண்டும்#சாமங்கவிய 05 நிமிடங்கள்23.03.2020
Published on March 23, 2020 11:48
No comments have been added yet.
இரா. எட்வின் [R.Edwin]'s Blog
- இரா. எட்வின் [R.Edwin]'s profile
- 1 follower
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

![இரா. எட்வின் [R.Edwin]](https://s.gr-assets.com/assets/nophoto/user/u_111x148-9394ebedbb3c6c218f64be9549657029.png)