நித்தியானந்தா எங்கிருக்கிறார் என்று உறுதியாகத் தெரியவில்லைஅவர் தான் வாங்கியுள்ள ஒரு தீவில் இருக்கிறார் என்கிறார்கள்அந்த தீவிற்கு கைலாஷ் என்று பெயர் வைத்திருப்பதாகக் கூறுகிறார்கள்அவர் இமயமலையில்தான் இருக்கிறார் என்கிறார்கள்காவல்துறை தேடிக்கொண்டிருக்கிறார்கள்அவர் தினமும் தினமும் வீடியோவில் உரையாற்றுகிறார்தனது தீவை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்று ஐநா சபைக்கு கோரிக்கை வைத்திருக்கிறார் என்கிறார்கள்அது ஒரு இந்துநாடு என்கிறார்கள்அதை அர்ஜுன் சம்பத் மகிழ்ந்து வரவேற்றிருப்பதாக செய்திகள் கூறுகின்றனஅவரது கடவுச்சீட்டை ரத்து செய்துவிட்டதாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறியுள்ளதாகவும் செய்திகள் வருகின்றனபகடிகளுக்கு அளவே இல்லை. அதில் உச்சம் என்னவென்றால் அவரது கடவுச்சீட்டு காலாவதியாகி பல காலமாச்சு என்பதுதான்
Published on December 09, 2019 08:51