பலூனைத் தொட்டால் தீட்டா....?

இன்றும் மூன்று விஷயங்கள் இருக்கின்றன பேச1) ஒரு மூத்த சான்றாண்மை மிக்க பேராசிரியரை ABVP மாணவர்கள் தங்கள் கால்களில் விழுந்து கும்பிட வைத்த கொடுமை2) கோவில் திருவிழாவில் கட்டப்பட்டிருந்த பலூனைத் தொட்டு விளையாடிய 12 வயது தலித் சிறுவனை அவன் வயதைச் சார்ந்த ஐந்து ஆதிக்கசாதி சிறுவர்கள் கொன்றுபோட்ட கொடுமை3) பூனேவில் நடந்து முடிந்த PEN INTERNATIONAL அமைப்பின் 84 மாநாட்டில் தோழர் பெருமாள் முருகனை தனது துணைத் தலைவர்களுள் ஒருவராக உள்ளெடுத்துக் கொண்டதுமத்தியபிரதேசத்தில் மண்ட்சவுர் என்னுமிடத்தில் ராஜிவ்காந்தி பெயரில் ஒரு கல்லூரி இருக்கிறது. அந்தக் கல்லூரியின் மூத்த மற்றும் மரியாதைக்குரிய பேராசிரியரும் ஆழமான நூல்களைத் தந்துள்ள சான்றாண்மை மிக்கவருமான முனைவர் தினேஷ் சந்திர குப்தா அவர்கள் வகுப்பெடுத்துக் கொண்டிருக்கிறார்அப்போது பாஜகவின் மாணவர் அமைப்பான ABVP யைச்சேர்ந்த சிலர் சத்தமாக கோஷங்களை எழுப்பியவாறு வருகிறார்கள்அந்த சத்தம் அவரது வகுப்பிற்கு இடையூறாக உள்ளது. எனவே அவர் அவர்களை சத்தமிடுவதை நிறுத்துமாறு கூறுகிறார்அவ்வளவுதான்அவரைத் தேசத்துரோகி என்கிறார்கள்அவர்கள் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று மிரட்டுகிறார்கள்பேராசிரியரும் அவர்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார்அந்த வீடியோ வைரலாக வருகிறதுஎன்னவிதமான மிரட்டல் வந்திருக்குமாயின் அந்த மாணவர்கள் கால்களில் அவர் விழுந்திருப்பார்ஆசிரியர்களை அமரவைத்து மாணவர்களை அவர்களது பாதங்களைக் கழுவி பாதபூஜை செய்யச் சொன்ன (சென்னையில் கூட நடந்தது) அமைப்பைச் சார்ந்த பிள்ளைகள் ஆசிரியரை தங்களது கால்களில் விழுந்து வைத்திருக்கிறார்கள்இந்த இரண்டில் எது அவர்களது உண்மையான முகம்?அவர்கள் போலியான வர்கள், ஆபத்தானவர்கள் என்பதை மக்களுக்கு புரிகிற மாதிரி எப்படி கொண்டுபோகப் போகிறோம்?உத்திரப்பிரதேசத்தில் ஆக்ராவிற்கு அருகே நட்ரோயி என்றொரு கிராமம் இருக்கிறது. அந்த கிராமத்தில் சமீபத்தில் திருவிழா நடைபெற்றிருக்கிறது.அந்தக்கோவிலைச்சுற்றி அலங்காரத்திற்காகக் கட்டப் பட்டிருந்த பலூன்களில் ஒன்றைப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்திருக்கிறான் 12 வயதொட்டிய ஒரு தலித் குழந்தை.அப்போது அவனது வயதொத்த 5 ஆதிக்கசாதி குழந்தைகள் அந்த வழியாக வருகிறார்கள். அவர்கள் கண்களில் இவன் பலூனைப் பிடித்து விளையாடிக் கொண்டிருப்பது படுகிறது.தலித் பையன் பலூனைத் தொட்டதால் ஆலயம் தீட்டுப் பட்டு விட்டதென்று கூறிக்கொண்டே அவர்களில் இருவர் அந்தப் பையனது கைகளைப் பிடித்துக் கொள்கின்றனர். இருவர் கால்களைப் பிடித்துக் கொள்கின்றனர். மிச்சமிருக்கிற ஒருவன் அவனது வயிற்றில்  மிதி மிதி என்று மிதிக்க பலூனைத் தொட்ட குற்றத்திற்காக அந்த தலித் பிள்ளை செத்துப் போகிறான்பூனாவில் முடிவடைந்த PEN INTERNATIONAL 84 வது மாநாட்டில் தோழர் பெருமாள் முருகன் அந்த அமைப்பின் துணைத் தலைவர்களுள் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்Poets, essayists,editors, and novelists என்பது இதன் விரிவு. தேவை கருதிதான் எடிட்டர்களை பிற்பாடு இணைந்திருக்கிறார்கள்இந்தியக் கருத்துச் சுதந்திரம் மிகவும் ஊனப்படுத்தப் பட்டிருப்பதாகவும் அதற்காக போராடும் எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள், மாணவர்கள், வழக்கறிஞர்கள் யாவரும் அச்சுறுத்தப் படுவதாகவும், தாக்கப்படுவதாகவும் கொலைசெய்யப் படுவதாகவும் இந்த மாநாடு கவலையோடு பார்த்திருக்கிறதுஉலகத்தின் அனைத்து படைப்பாளிகளும் இதற்கு எதிர்வினையாற்ற வேண்டும் என்று கோரியிருக்கிறதுதோழர் பெருமாள் முருகன் அந்த அமைப்பின் அகில உலகத் துணைத் தலைவர் என்பது பெருமைக்குரிய விஷயம்அந்த அமைப்பை வீரியத்தோடு நம் மண்ணில் களமிறக்க வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையோடு பெருமாள் முருகனுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்#சாமங்கவிந்து ஒரு மணி 17நிமிடங்கள்
30.09.2018
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 30, 2018 00:31
No comments have been added yet.


இரா. எட்வின் [R.Edwin]'s Blog

இரா. எட்வின் [R.Edwin]
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.