14.09.2018
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கால் நூற்றாண்டிற்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஏழு பேரையும் மாநில அரசு விரும்பினால் அமைச்சரவைக் கூடி முடிவெடுத்து விடுவித்துக் கொள்ளலாம் என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்த உத்தரவு வந்தவுடனே பெரும்பான்மை தமிழ் மக்கள் உடனே அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கத் துவங்கி விட்டார்கள்.தமிழகத்தின் எதிர்கட்சித் தலைவர் திரு மு.க..ஸ்டாலின் அவர்கள் ”காலம் தாழ்த்தாது உடனடியாக அவர்களை விடுதலை செய்வதற்கு மாநில அரசு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்” என்று கோரியுள்ளார்.மாநில அரசும் காலத்தை வீணடிக்காமல் அவசர கதியில் களம் இறங்கியது. அமைச்சரவை உடனே கூடியது. எழுவரையும் விடுவிப்பது என்று தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுகிறதுகூடிய வேகத்தினும், தீர்மானம் நிறைவேற்றிய வேகத்தினும் கூடுதல் வேகத்தோடு அதை மாநில ஆளுநருக்கு அனுப்பி வைக்கிறது. அவை அனைத்தின் வேகத்தினும் அதிக வேகத்தோடு அந்த்த் தீர்மானத்தை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்புகிறார் மாண்புமிகு ஆளுநர்.உச்சநீதி மன்றத்தின் பெஞ்ச் அளித்துள்ள உத்தரவு தெளிவாக இருக்கிறது. மாநில அரசு விரும்பினால் அவர்களே தீர்மானம் நிறைவேற்றி அவர்களை விடுதலை செய்யலாம்.மாநில அரசு அவர்களை விடுதலை செய்ய விரும்புகிறது. தீர்மானம் நிறைவேற்றுகிறது. இந்தத் தீர்மானத்திற்கு இந்த அரசின் நிர்வாகத் தலைவரான ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும். அதற்காக அந்தத் தீர்மானத்தை மாண்பமை ஆளுநர் அவர்களுக்கு அனுப்பி வைக்கிறது.இந்த நிலையில் ஒன்று அவர் அதை ஏற்று அதற்கு ஒப்புதல் வழங்க வேண்டும். அல்லது அதை ஏற்க மறுத்து அரசுக்குத் திருப்பி அனுப்ப வேண்டும். அதன் பிறகு என்ன செய்வது என்பது அதன் பிறகான விஷயம்.
ஆளுநரோ அதை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தெளிவு பெறுவதற்காக அனுப்புகிறார். உச்சநீதி மன்றம் பிறப்பித்த உத்தரவை மாற்றுகிற அதிகாரம் உள்துறை அமைச்சகத்திற்கு இருப்பதாகப் படவில்லை.எப்படிப் பார்த்தாலும் இது நீதிமன்ற அவமதிப்பே.இது ஒருபுறம் இருக்க பாஜகவும் காங்கிரசின் பல தலைவர்களும் ஊடகங்களில் லபோ திபோ என்று கொதிக்கிறார்கள்.ராஜீவ் காந்தி கொலைக்கு ஒரு நியாயம் வேண்டாமா? என்கிறார்கள்.வேண்டும், நிச்சயமாக வேண்டும்.ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள் கனவான்களே, அவரது கொலையைப் போலவே இளவரசன் கொலைக்கும் சங்கர் கொலைக்கும் நியாயம் வேண்டும் என்பதுதானே நியாயம்ஒன்று புரியுமா, இவற்றில் எந்த வழக்கையும் நீங்கள் முறையாக விசாரிக்கவே இல்லை.ராஜீவ் கொலை வழக்கில் இன்னும் விசாரிக்க வேண்டி இருப்பதாக கமிஷன் சொல்லவில்லையா நியாயவான்களே?. எனில், வழக்கு இன்னும் முடியவே இல்லையே. அப்புறம் எப்படி இவர்கள் குற்றவாளிகள் ஆவார்கள்?குற்றவாளிகளைத் தண்டியுங்கள். அதற்கு நீங்கள் விசாரனைக் கைதியை விசாரிப்பதுபோல திரு சுப்ரமணியசாமியை விசாரிக்க வேண்டி வரும். அவரையும் திருச்சி வேலுசாமியையும் விசாரிக்காமல் உங்களால் இந்த வழக்கில் ஒரு முடிவுக்கு வர முடியாது.இந்த வழக்கை சரியாக முன்னெடுப்பதில் திருமதி சோனியா காந்தியே முனைப்பு காட்டாததில் கவலை தெரிவிக்கும் வேலுசாமி தன்னை அழைத்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கொண்டே இருக்கிறார். அவர் காங்கிரச்காரரும்கூட.இந்த நேரத்தில் போலிசாருடன் தனக்கு ஏற்பட்ட விவாத்த்தில், “ஹை கோர்ட்டாவது மயிராவது” என்று பாஜக வின் தேசிய செயலாளார் H.ராஜா கூறியிருக்கிறார்.இந்த தேசத்தை ஆளும் கட்சியின் தேசிய செயலாளர் கோர்ட்டாவது மயிராவது என்பது அந்தக் கட்சியின் நிலைப்பாடு அல்ல எனில் அவரை கட்சியைவிட்டு விலக்க வேண்டும். அதை செய்யாவிட்டால் கட்சியின் நிலைப்பாடும் அதுதான் என்று கொள்ள வேண்டும்.முட்டிக்கு முட்டி தட்டி அவரை உள்ளே போடுங்கள்.அவர்களை விடுவிக்க வேண்டும் என்று திமுக கோருகிறது. ஆளும் அதிமுக விடுதலை செய்ய முயற்சிக்கிறது.எழுவரின் விடுதலையை எதிர்க்கும் கட்சிகளோடு தேர்தல் உடன்பாடு கொள்வதிற்கில்லை என்று ஏன், திமுகவும் அதிமுகவும் கூறக்கூடாது?#சாமங்கவிய ஒரு மணி 6 நிமிடங்கள்

Published on September 15, 2018 23:33
No comments have been added yet.
இரா. எட்வின் [R.Edwin]'s Blog
- இரா. எட்வின் [R.Edwin]'s profile
- 1 follower
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.
![Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.](https://s.gr-assets.com/assets/links/rss-d17345b73ab0388f7a23933239a75efb.gif)