02.09.2018
காக்கையில் திரு ஸ்டாலின் அவர்களுக்கு நான் எழுதியிருந்த கடிதம் சரியாக சென்று சேர்ந்ததில் கொஞ்சம் மகிழ்ச்சியாயிருக்கிறது.கலைஞர் நினைவேந்தலின் பொருட்டு செப்டம்பர் மாத காக்கையை ஒரு வாரம் முன்னதாகவே முடித்திருந்தோம். அட்டைப் படம் தோழர் ட்ராட்ஸ்கி மருது வரைந்த கலைஞர் படம். என்னுடைய கடிதம் உட்பட கலைஞர் குறித்த மூன்று கட்டுரைகள். எனவே நினைவேந்தல் அன்று அரங்கத்தில் விநியோகித்தால் நன்றாக இருக்கும் என்பதால் இந்த ஏற்பாடு.வெள்ளியன்று திருச்சி NCBH மேலாளர் திரு முரளி அழைத்தார். போன வாரம்தான் நான் தரவேண்டிய பாக்கித் தொகையை வாங்கிப் போனார். கணக்கில் விடுபடல் இருந்து கேட்கிறார்போல என்று நினைத்தேன்.எடுத்ததும், “அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு” என்று ஆரம்பித்தார். கடிதம் நன்றாக இருப்பதாக கூறினார். புதிய தகவல்கள் என்றும் எடுத்துச் சொன்ன விதம் நன்றாக இருந்தது என்றும் கூறினார்.மாலை ஷார்ஜாவில் இருந்து வந்திருந்த தங்கை தீபாவின் கணவர் சிவா படித்துப் பார்த்துவிட்டு “மாமா, ஒரு கம்யூனிஸ்டாலதான் இப்படி எழுத முடியும்” என்றவர் கடவூர் நூலகத்திற்கு சந்தா கட்டிவிட்டு சென்றார்.இரவு ‘ஜனசக்தி’ யில் பணியாற்றும் பிரபு தோழர் முத்தையாவிடம் எண் வாங்கி அரைமணி நேரமெனும் பேசியிருப்பார்.நேற்று ராஜமுருகு பாண்டியன் (அரச முருகு பாண்டியன்) அழைத்து கடிதத்தின் இறுதிப் பகுதியைக் குறித்து நெகிழ்ந்தான்.சூத்திர விடுதலைக்கு தலித் விடுதலை முன்நிபந்தனை என்பதை நெகிழ்ந்து கொண்டாடினான்திரு க.திருநாவுக்கரசு அவர்களும் முன்னால் மத்திய அமைச்சர் சுப்பு லட்சுமி ஜெகதீசன் அம்மாவும் கடிதம் குறித்து பேசியதாக தோழர் முத்தையா கூறினார்.இருவரும் என்னிடமும் பேசினார்கள்.மருது மற்றும் மோகன்ராஜின் கலைஞர் குறித்த கட்டுரைகளும் வரவேற்பைப் பெற்றிருப்பதாகவும் முத்தையா கூறினார்அந்தக் கடிதத்தில் நெருக்கடி நிலையின்போது கலைஞர் துண்டறிக்கைகளை முரசொலி அச்சகத்தில் அச்சடித்தார் என்று எழுதியிருப்பேன். அது அப்படி அல்ல என்றும் அதை தனது ‘நக்கீரன்’ அச்சகத்தில் தான் அடித்து சென்று கலைஞரிடம் கொடுத்த்தாகவும் கூறினார்.சுப்புலட்சுமி அம்மா “பிரமாதம் எட்வின், ஆமா தளபதிக்கு நீ கடிதங்களை இணையத்தில் எழுதுகிறாயாமே, இதுவரை எழுதியவற்றை எனக்கு மின்னஞ்சல் செய். இனி எழுதுவதை முரசொலிக்கு அனுப்பு என்றார்இரண்டு விஷயங்கள்1) யாரும் ஏன் இப்படி ஸ்டாலினுக்கெல்லாம் எழுதிக் கொண்டு என்று கேட்கவில்லை
2) எப்படி ஸ்டாலினை ஸ்டாலின் என்று அழைக்கலாம் என்றும் யாரும் கோவப்படவில்லைஇரண்டுமே நல்ல விஷயங்கள்கலைஞருக்கு ஏன் இவ்வளவு பக்கங்கள் என்று யாரேனும் கேட்டால் காக்கையை நடத்துமளவு நாங்கள் இருக்கிறோம் எனில் அதில் கலைஞரின் பங்கும் உண்டு என்பதே எமது பதில்அந்தக் கடிதத்தை நாளை வைக்கிறேன்Kaakkai Cirakinile#சாமங்கவிய இருபத்தியாறு நிமிடங்கள்
2) எப்படி ஸ்டாலினை ஸ்டாலின் என்று அழைக்கலாம் என்றும் யாரும் கோவப்படவில்லைஇரண்டுமே நல்ல விஷயங்கள்கலைஞருக்கு ஏன் இவ்வளவு பக்கங்கள் என்று யாரேனும் கேட்டால் காக்கையை நடத்துமளவு நாங்கள் இருக்கிறோம் எனில் அதில் கலைஞரின் பங்கும் உண்டு என்பதே எமது பதில்அந்தக் கடிதத்தை நாளை வைக்கிறேன்Kaakkai Cirakinile#சாமங்கவிய இருபத்தியாறு நிமிடங்கள்
Published on September 02, 2018 18:42
No comments have been added yet.
இரா. எட்வின் [R.Edwin]'s Blog
- இரா. எட்வின் [R.Edwin]'s profile
- 1 follower
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.
![Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.](https://s.gr-assets.com/assets/links/rss-d17345b73ab0388f7a23933239a75efb.gif)