ஒன்பதரை விமர்சனங்கள்
தனிப்பேச்சில் / சாட்டில் பேசியவற்றைக் கழித்து பொதுவெளியில் பகிரப்பட்டுள்ளதை மட்டும் கணக்கில் கொண்டால் 'ஆப்பிளுக்கு முன்' நாவலுக்கு இது வரை ஒன்பதரை விமர்சனங்கள் வந்துள்ளன. தமிழ்ச் சூழலில் இதுவே அதிகபட்சம் என்று திருப்திப்பட முகாந்திரம் உண்டு தான் என்றாலும் இந்நாவல் இன்னும் கொஞ்சம் கூடுதல் வாசக உரையாடலுக்குத் தகுதி பெற்றது என நம்புகிறேன். அதனால் இதைப் பரப்ப விரும்புகிறேன். வேறு எவரும் செய்ய மாட்டார்கள் என்பதால் என் நாவலை நானே சந்தைப்படுத்துவதற்குத் துணிந்து விட்டேன். அது தான் இந்த விமர்சனக் கட்டுரைப் போட்டி அறிவிப்பு.
செல்வத்தை வாரி இரைத்துத் தன்னைப் புகழ்ந்து பாடச் சொல்லும் புரவலன் பிம்பம் வந்து விடக்கூடாது என்ற தயக்கம் இருந்தது. நான் புரவலனும் அல்லன்; என்னிடம் அத்தனை செல்வமும் இல்லை; நான் புகழக் கோரவும் இல்லை. நாவல் பரவலாய் வாசிக்கப்பட்டு அதற்குரிய இடத்தை - அது கீழோ மேலோ - பெற வேண்டும் என்பது தான் என் எளிய அவா.
நண்பரிடம் தயக்கத்தைச் சொன்ன போது தமிழ் எழுத்துச்சூழலில் சுயசந்தைப்படுத்தலுக்கு இது தொடக்கமாக இருக்கலாம் என்றார். பிறகு, இதைச் செய்வதால் இழக்கப் பெரிதாய் ஒன்றுமில்லை என்று உணர்ந்து இறங்கி விடத் தீர்மானித்தேன்.
இப்போட்டிக்கான வெள்ளோட்டமாய் "ஆப்பிளுக்கு முன் நாவலை ஏன் படிக்க விரும்புகிறேன்?" என்று சொல்லும் போட்டி ஒன்றை ஃபேஸ்புக்கில் நடத்திப் பார்த்தேன். சுமார் 30 பேர் கலந்து கொண்டார்கள். அதில் வந்த நான்கைந்து பதிவுகள் உண்மையானதாகவும் பொருட்படுத்தத்தக்கனவாகவும் இருந்தன. இதை நடத்தும் உந்துதலை அதுவே அளித்தது.
"ஏன் படிக்க விரும்புகிறேன்?" போட்டி புத்தகமே வாங்கி இராதவர்களுக்கானது என்றால், இந்தப் போட்டி புத்தகம் வாங்கி வைத்து இன்னும் வாசிக்காமல் இருப்பவர்களுக்கும், வாசித்தும் அதைப் பற்றி எழுத வாய்ப்பு கிட்டாதவர்களுக்குமானது.
போட்டி எளிமையானது. 'ஆப்பிளுக்கு முன்' நாவலை வாசித்து உங்கள் கருத்துக்களை ஒரு விமர்சனக் கட்டுரையாக எழுதுங்கள். வலைப்பதிவாக, ஃபேஸ்புக் பதிவாக, ட்விட்லாங்கராக, மீடியம் போஸ்டாக என எந்தவொரு ரூபத்திலும் இருக்கலாம். குறைந்தபட்சம் 700 சொற்களில்; அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும். அதன் சுட்டியை மட்டும் எனக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்: c.saravanakarthikeyan@gmail.com. சரியாய் ஒரு மாதம் கெடு (23 செப்டெம்பர் வரை). ஏற்கனவே வெளியான பழைய விமர்சனங்கள் கூடாது.மின்னஞ்சலில் பகிரப்படும் சுட்டிகள் மட்டுமே கணக்கு. இங்கே வரும் கமெண்ட்கள் எடுத்துக் கொள்ளப்படாது. ஆக, விமர்சனம் எழுதியதோடு, அதை எனக்கு அனுப்பவும் மறக்காதீர்.
நாவல் மொத்தமே 150 பக்கங்கள் தான். தாரளமாய் ஒரு மாத அவகாசத்தில் வாசித்து ஒரு சிறுவிமர்சனக் கட்டுரை எழுதி விட முடியும். கொஞ்சம் முயன்றால் சரியாக எழுதி விட முடியும். கூடுதலாய் மெனக்கெட்டால் நன்றாகவும் வந்து விடும். (எழுதிய கட்டுரையின் சொற்களை விரல் விட்டெண்ணிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. ஏராளமான ஆன்லைன் சொல் கவுண்டர் உண்டு. பெயர்தான் அப்படியிருக்கிறதே ஒழிய, எச்சாதியினரும் பயன்படுத்தலாம். உதா: https://wordcounter.net/.)
போட்டியை நானே நடத்துவதால் பாராட்டித் தான் எழுத வேண்டும் என்பதில்லை. கடுமையாக விமர்சித்தும் எழுதலாம்; நாவல் குப்பை எனத் திட்டலாம். நாவலே இல்லை என நிராகரிக்கலாம். எழுதப்படும் விமர்சனம் நேர்மையானதாகவும் சுவாரஸ்யமானதாகவும் இருக்க வேண்டும் என்பது மட்டுமே அளவுகோல். அவ்வளவு தான். பரிசுக்குரிய கட்டுரைகளைத் தேர்ந்தெடுக்கப் போவது நான் அல்லன். இரண்டு முக்கியமான படைப்பாளிகள் இப்போட்டிக்கு நடுவராக இருந்து சிறந்த கட்டுரைகளைத் தேர்ந்தெடுக்கச் சம்மதித்துள்ளனர். ஒருவேளை போட்டிக்கு வரும் பதிவுகளின் எண்ணிக்கை 20க்கு மேல் இருந்தால், அவற்றில் எனக்குச் சிறப்பானதாய்த் தோன்றும் 20 கட்டுரைகளை மட்டும் நடுவர்களுக்கு அனுப்பி வைப்பேன். இறுதித் தீர்ப்பு அவர்களுடையது. அதில் என் தலையீடு இராது. போட்டி முடிவு காந்தி ஜெயந்தி அன்று அறிவிக்கப்படும்.
முதல் பரிசு - ரூ. 3,000 /-இரண்டாம் பரிசு - ரூ. 2,000 /-மூன்றாம் பரிசு - ரூ. 1,000 /-ஆறுதல் பரிசு - இரண்டு பேருக்கு தலா ரூ. 500 /-புத்தகம் வாங்கும் வழிகளைக் கீழே தந்திருக்கிறேன். போட்டியில் பங்கேற்கப் போகிறவர்களுக்கு என் அன்பு. எழுதுக!
அச்சுப் புத்தகம் வாங்க
Amazon NHM Common Folks Namma Books Puthinam BooksMarina Books தொலைபேசி / WhatsApp: 84894 01887 (கதிரேசன்)உயிர்மை பதிப்பகம், புதிய எண்: 79 (பழைய எண்: 39), போயஸ் தோட்டம், இளங்கோ சாலை, ராஜ் டிவி அருகில், தேனாம்பேட்டை, சென்னை - 600018. அலைபேசி: 090032-18208எங்குமே கிடைக்கவில்லை எனில் என்னைத் தொடர்பு கொள்ளவும்.கிண்டில் வடிவில் வாங்க
Kindle India Kindle US

இந்தப் பதிவிலேயே போதுமான அளவு தகவல்கள் தந்து விட்டதாக நினைக்கிறேன். இது தொடர்பாக என்னிடம் சாட்டிலோ கமெண்ட்டிலோ கேட்க ஏதுமில்லை என நம்புகிறேன். (ஒருவேளை ஏதேனும் இருப்பின் நானே இப்பதிவைப் புதுப்பிப்பேன்.)
*
நூல் பின்னட்டைக் குறிப்பு
ஏதேன் தோட்டத்து ஆப்பிளைப் புசிப்பதற்கு முந்தைய கணங்களில் ஆதாமும் ஏவாளும் தம் நிர்வாணம் பற்றிய ப்ரக்ஞையற்று இருந்தனர். மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி தன் ஆயுளின் இறுதியாண்டுகளில் சர்ச்சைக்குரிய பிரம்மச்சரியப் பரிசோதனைகளின் வழி அடைய முயன்றது காமம் துறந்த அந்நிலையைத் தான். உடலை முன்வைத்த அப்பரிசோதனைகளை காந்தி, அதில் பங்கு கொண்ட பெண்டிர் மற்றும் சுற்றத்தார் மனதுள் நின்று முக்கோணத்தில் பார்க்க முயல்கிறது இப்புனைவுப் பிரதி. ஒருவகையில் இதில் காந்தி மேலும் பொலிவுடன் மகாத்மாவாய்த் துலங்குகிறார்.
நூல் முன்னுரை : http://www.writercsk.com/2018/01/blog-post_14.html
நூல் பற்றி ரமேஷ் வைத்யா உரை: https://www.youtube.com/watch?v=W6EjwFV3RMw
ஆப்பிளுக்கு முன் நாவலுக்கு இது வரை வந்த விமர்சனங்கள்
ஆர். அபிலாஷ் - http://thiruttusavi.blogspot.com/2017/12/blog-post_1.htmlபா. ராகவன் - https://www.facebook.com/raghavan.pa/posts/1959468851047387சுனீல் கிருஷ்ணன் - https://www.facebook.com/suneel.krishnan/posts/10216272951243982சித்துராஜ் பொன்ராஜ் - https://www.facebook.com/photo.php?fbid=468351986933731சித்தார்த்தன் சுந்தரம் - https://www.facebook.com/photo.php?fbid=10214836532412590சுப்ரஜா - https://www.facebook.com/photo.php?fbid=1696856953703285ஹரி ரஹ்மான் - https://www.facebook.com/hariharan.jeg/posts/1779916875399788வித்யா - https://www.facebook.com/permalink.php?story_fbid=475740549490374&id=100011632997124மோகன் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10155656308137108 நந்தாகுமாரன் - https://www.facebook.com/nundhaa/posts/1581795691857448ஆப்பிளுக்கு முன் நாவலை ஏன் படிக்க விரும்புகிறேன்? பதிவுகள்
Vigneswari Suresh - https://www.facebook.com/VignaAchuthan/posts/10212054871108964Ashok Raj - https://www.facebook.com/ashokthegamer/posts/1866315793461896Seyon Mayon - https://www.facebook.com/lemurian.voice/posts/676161356081123Pandian Siva - https://www.facebook.com/manivanna.siva/posts/2053824997982062Rishikesh Raghavendiran - https://www.facebook.com/rishikesh.raghavendiran/posts/2213174698963465***
Published on August 23, 2018 21:40
No comments have been added yet.
C. Saravanakarthikeyan's Blog
- C. Saravanakarthikeyan's profile
- 9 followers
C. Saravanakarthikeyan isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.
