17.07.2018
அந்தக் குழந்தையை பதினேழுபேர் வண்புணர்ந்திருக்கின்றனர்ஏழு மாதங்களாகத் தொடர்ந்து வன்புணர்ந்திருக்கின்றனர்கத்தியைக் காட்டி மிரட்டி அந்தப் பிஞ்சை வன்புணார்ந்திருக்கின்றனர்வன்புணரப்பட்டக் குழந்தை ஒரு மாற்றுத் திறனாளிஇந்த வழக்கில் அந்தப் பதினேழுப் பேருக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் யாரும் வழக்காடப் போவதில்லைஅவர்களை நடுரோட்டில் வைத்து சுட்டுக் கொல்ல வேண்டும்ஏழு மாதங்களாக ஒரு சின்னஞ்சிறு பிள்ளையை கூட்டாக வன்புணர்ந்திருக்கிறார்கள் என்பதறிந்த பிறகும் எப்படி சிலர் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்என்றெல்லாம் வரும் பதிவுகள் நம் நெஞ்சைக் கிழிக்கின்றனஇப்படி ஏதோ ஒரு குழந்தை வன்புணரப்படாத ஏதேனும் ஒரு மாதம் ஆகச் சமீபத்தில் நம்மைக் கடந்து சென்றிருக்கிறதா?நாம் கொந்தளித்து அவற்றிற்கெதிராக எப்போதாவது எதிர்வினையாற்றாது இருந்திருக்கிறோமா?தொடர்ந்து எதிர்வினையாற்றிக் கொண்டிருக்கிறோம் என்பதற்காக இந்த வெறித்தனம் நின்றுபோயிருக்கிறதா?குறையவில்லை என்பதால் நம் எதிர்வினையும் கண்ணீரும் பொருளற்றது அல்லது பலமற்றது என்று கொள்ள முடியுமா?இவற்றுக்கான வேர்க்காரணங்கள் குறித்து நாம் கவனம் குவிக்கவோ எஜுகேட் செய்யவோ நாம் தவறியிருக்கிறோம்நமது கோவத்தையும் அழுகையையும் கொட்டித்தீர்த்துவிட்டு நகர்ந்து விட்டோம்இந்தக் கேவலமான வெறியோடு திரிந்த பதினேழுபேரும் எப்படி ஒருங்கிணைந்தார்கள்?இவர்களை ஒன்றிணைத்த மையச் சரடு எது?இந்த அசிங்கமான வெறியை எப்படி ஒருவர் மற்றவருக்கு கடத்தினர்?இன்னும் பச்சையாக சொல்வதெனில் இவர்கள் எப்படித் தங்களை அடையாளம் கண்டு கொண்டனர்?இந்தக் குழந்தையை எப்படி இவர்கள் தேர்ந்தெடுத்தனர்?பொருளாதார வசதியற்ற இவர்களால் போதைக்கும் மற்றதற்கும் எப்படி செலவு செய்ய முடிந்தது?எனில், இதற்குப் பிண்ணனியில் படமெடுக்கும் கூட்டம்போன்றுஎவையேனும் இருக்கின்றனவா?அந்தக் குழந்தையின் சம்மதமின்றி இது நடந்திருக்காது என்று சொல்பவர்கள் இவர்களைவிடவும் குற்றவாளிகள் அல்லவா?குறைந்த பட்சம் இவற்றின் மீது நாம் இதுமாதிரி நகர்வுகளை முன்னெடுக்கலாமா?படைப்பாளிகளும் பதிவர்களும் இவற்றிற்கெதிராக கூட்டாக கையெழுத்திட்டு ஒரு பிரகடனத்தை வெளியிடலாமா?மாவட்டங்கள் தோறும் ஆர்ப்பாட்டம் தெருமுனைப் பிரச்சாரம் உண்ணாவிரதம் போன்ற எதிர் நடவடிக்கைகளில் ஈடுபடலாமா?வேறு என்னவெல்லாம் செய்யலாம்?#சாமங்கவிவதற்கு 26 நிமிடங்கள் இருக்கும்போது
Published on July 26, 2018 11:25
No comments have been added yet.
இரா. எட்வின் [R.Edwin]'s Blog
- இரா. எட்வின் [R.Edwin]'s profile
- 1 follower
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.
![Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.](https://s.gr-assets.com/assets/links/rss-d17345b73ab0388f7a23933239a75efb.gif)