நால்வருக்கும் என் முத்தம்


மூன்றுமுறை ஏலகிரிமலைக்கு சென்றிருக்கிறேன் உரையாற்றுவதற்காக. அத்தனை வாய்ப்புகளும் தம்பி Ilamparithi Parithi மூலம்தான். திருப்பத்தூரில் இருந்து ஒவ்வொரு முறையும் இருசக்கர வாகனத்தில்தான் அழைத்துப் போவான். பேசிக்கொண்டே போவோம்.எப்படி இத்தனை இழப்புகளையும் தாங்கிக் கொண்டு இவனால் இவ்வளவு உற்சாகத்தோடு இயங்க முடிகிறது? என்று அவனை அறிந்த நொடியிலிருந்து அய்யம் இருந்துகொண்டே இருந்தது. அப்படியான ஒரு மலை ஏற்றத்தின்போது சொன்னான்,“எவ்வளவோ இறுக்கம், கவலை, அவளோடு சண்டை எதுவாயினும் இப்படித்தான் அண்ணே இருவரும் இதே வண்டியில் இதே மலைக்கு கிளம்பிடுவோம். மேலே போகிற வரைக்கும் சண்டை, திட்டு, கண்ணீர், ஆறுதல் என பரஸ்பர பறிமாற்றம் இருக்கும். பிரச்சினைகள் தீரும் வரை பேசுவோம். தீர்ந்துடும். மலர்ச்சியா திரும்பிடுவோம்”அவன் இவ்வளவு உற்சாகமாக இருக்கிறான் என்றால், இத்தனை இழப்புகளையும் துரோகங்களையும் தாண்டி அவன் இயங்குகிறான் என்றால் அதற்கு காரணம் அவனோடு இணைந்த பாப்பாவிற்கும் அவர்களது பாப்பாக்களுக்கும் இவனுக்கும் இடையே விரவிக்கிடக்கும் நிபந்தனையற்ற அன்பே காரணம்.இந்த நாளில் இந்த அன்புதான் என்னை சிலிர்க்க வைக்கிறது.நால்வருக்கும் என் முத்தம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 13, 2018 20:41
No comments have been added yet.


இரா. எட்வின் [R.Edwin]'s Blog

இரா. எட்வின் [R.Edwin]
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.