உரையாடலைத் தொடங்குவோம்

கல்வியில் மாற்றம் செய்வதெல்லாம் பலனைத் தராது மாற்றுக் கல்வியே இன்றைய தேவை என்று தோழர் Rabeek Raja இன்று எழுதியிருந்தார். இதுதான் மிகச் சரியான பார்வை. இத்ற்காகத்தான் அவரவரும் அவரவரால் இயன்ற அளவு எதையாவது செய்து கொண்டிருக்கிறோம்,. ஆனால் பலன் இல்லை. என்ன காரணம்? சிதறிக்கிடக்கிற சிறுபான்மைத் திரளாகிப் போனோம்.கருத்தாலும் கரத்தாலும் இந்தத் திரள் ஒன்றிணைய வேண்டும். நல்ல இயக்கங்களோடு உரையாடவும் உறவாடவும் தொடங்க வேண்டும். மாற்றுக் கல்விக்கான தேவைக்காக களமேகும் அதே வேளையில் மாற்றுக்கல்விக்கான கட்டமைப்பை சிலபஸை கண்டடைய முயற்சி செய்ய வேண்டும்.“மாற்றுக் கல்வி” எது என்பதை வடிவமைப்பது, முன்வைப்பது, விவாதிப்பது, திருத்தங்களை தொடர்ந்து ஏற்பது, அது குறித்து பொது வெளியில் பேசுவது அதற்கான தேவைப்படும் போராட்டங்களை கையெடுப்பது என்கிற நடைமுறைக்கு வரவேண்டும்.ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னால் மதுரையில் இதற்கான முயற்சியை தோழர் Varthini Parvatha எடுத்திருந்தார்.அவர் ஏற்பாடு செய்திருந்த அந்தக் கூட்டத்திலும் ரபீக் ராஜா கலந்து கொண்டார். ஸ்ரீரசா, Marx Pandian போன்றோர் கலந்து கொண்டோம்.ஆழமான கருத்துக்கள் அந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. நான் கலந்துகொண்ட மிக நல்ல கூட்டங்களுள் அதுவும் ஒன்று.சோகம் என்னவெனில் அதை அதற்குமேல் முன்னெடுக்க இயலாது போனது. ஆனாலும் அந்த முயற்சிக்காக தோழர் பர்வதா கொண்டாடப் பட வேண்டியவர். அன்றைய விவாதங்களின் மினிட்ஸ் கையேடாகவே அமையும்.அமைப்புகளும் இந்த விஷயத்தைப் பேச வேண்டுமென்றால் இவர் போதும் என்ற நிலையிலிருந்து மாறி இறங்கி வரவேண்டும் . அல்லது இந்த ஆண்டு இந்த மாதத்தில் என்ன கோரிக்கைக்காக எந்த மனிதரைக் கொண்டு மாநாடு அல்லது பேரவை போட்டீர்களோ அடுத்த ஆண்டும் அதே மாதத்தில் அதையேதான் தொடர வேண்டியவர்களாக இருப்பீர்கள்இந்தக் கருத்துக்களோடு உடன்பாடு உள்ளோர் உரையாடலைத் தொடங்குவோம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 08, 2017 10:18
No comments have been added yet.


இரா. எட்வின் [R.Edwin]'s Blog

இரா. எட்வின் [R.Edwin]
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.