A Guest Post by சிவக்குமார் சூலூர்குழந்தை கவிதை:
பூக்கள் அழகென்று கவிதை எழுதினேன் ; இன்று அப்பூக்களே தோற்றது நீ பூத்த புன்னகையால்
~~~~$$$~~~~
நீ உறங்கும் அழகினிலே நான் உறங்க மறந்தேன்
~~~~$$$~~~~
கலப்படமில்லா உன் சிரிப்பினிலே நான் கரைந்து போனேன்
~~~~$$$~~~~
உன்னை பற்றி கவிதை எழுத நானும் குழந்தையாகிறேன்
~~~~$$$~~~~
தொட்டிலில் உறங்கும் எனது கவிதை நீ
~~~~$$$~~~~
வீட்டினுள் வானவில் உன் சிரப்பினிலே
~~~~$$$~~~~
தலைகுனிந்தேன் உன்னை முத்தமிட தலைநிமிர்ந்தேன் உன் தந்தையாக
~~~~$$$~~~~
கவிதை எழுத மனமில்லை கவிதையாய் நீ இருக்க.
~~~~$$$~~~~
Published on January 24, 2016 06:08