வெண்முரசு – 26 – நூல் இருபத்தியாறு – முதலாவிண் Quotes
வெண்முரசு – 26 – நூல் இருபத்தியாறு – முதலாவிண்
by
Jeyamohan20 ratings, 4.65 average rating, 1 review
வெண்முரசு – 26 – நூல் இருபத்தியாறு – முதலாவிண் Quotes
Showing 1-29 of 29
“அறத்தின்பொருட்டு துயருறுபவனை நம்பியே அறம் மண்ணில் வாழ்கிறது. மானுடன் கொள்ளும் உணர்வுகளில் குற்றவுணர்வுக்கு நிகரான தூய்மையும் மாண்பும் கொண்டது பிறிதில்லை.”
― வெண்முரசு – 26 – நூல் இருபத்தியாறு – முதலாவிண்

“ஆழி மழையால் குன்றுகிறது, ஆறுகளால் கூடுகிறது. தானே அளித்து தானே பெற்றுக்கொண்டிருக்கிறது”
― வெண்முரசு – 26 – நூல் இருபத்தியாறு – முதலாவிண்
― வெண்முரசு – 26 – நூல் இருபத்தியாறு – முதலாவிண்
“தெய்வங்கள் ஆத்மாவிற்கு உடலை அருளென்றும் தீச்சொல்லென்றும் அளிக்கின்றன. உடலினூடாகவே திகழவும், வெளிப்படவும், எய்தவும் இயல்கிறது. உடலே முற்றிலும் திகழவும், முழுமையாக வெளிப்படவும், இறுதியாக எய்தவும் தடையாக அமைகிறது.”
― வெண்முரசு – 26 – நூல் இருபத்தியாறு – முதலாவிண்
― வெண்முரசு – 26 – நூல் இருபத்தியாறு – முதலாவிண்
“தெய்வங்களேயானாலும் மீறமுடியாதவை சில உண்டு, அறம் அதில் ஒன்று”
― வெண்முரசு – 26 – நூல் இருபத்தியாறு – முதலாவிண்
― வெண்முரசு – 26 – நூல் இருபத்தியாறு – முதலாவிண்
“நாம் அடைந்தபோதெல்லாம் இழந்திருக்கிறோம். இழந்தவையே மேலானவை என்று அடைந்தபின் உணர்ந்திருக்கிறோம்.”
― வெண்முரசு – 26 – நூல் இருபத்தியாறு – முதலாவிண்
― வெண்முரசு – 26 – நூல் இருபத்தியாறு – முதலாவிண்
“துயருக்குத்தான் எடைமிகுதி என எண்ணியிருந்தேன்” என்றாள். “சென்றகாலத்து இன்பம் பலமடங்கு எடைகொண்டது” என்றான் பீமன்.”
― வெண்முரசு – 26 – நூல் இருபத்தியாறு – முதலாவிண்
― வெண்முரசு – 26 – நூல் இருபத்தியாறு – முதலாவிண்
“ஒரு தளிர் மண்ணில் விழும்போது அது வளர்ந்து கிளையாகி மலராகி காயாகி கனியாகி விதைபெருக்கி உருவாக்கவிருந்த அந்தக் காடு எங்கே செல்கிறது?”
― வெண்முரசு – 26 – நூல் இருபத்தியாறு – முதலாவிண்
― வெண்முரசு – 26 – நூல் இருபத்தியாறு – முதலாவிண்
“சருகுகள் உதிரும் நெறி புரிகிறது, தளிர்களும் ஒடிந்து சரியும் புயலை ஏன் எழுப்புகின்றன தெய்வங்கள்?”
― வெண்முரசு – 26 – நூல் இருபத்தியாறு – முதலாவிண்
― வெண்முரசு – 26 – நூல் இருபத்தியாறு – முதலாவிண்
“நான் வரும் வழியெங்கும் சிற்றூர்களிலெல்லாம் இளைய யாதவரின் விண்புகுதலை மக்கள் கொண்டாடிக்கொண்டிருந்தனர். இளஞ்சிறுவர்களுக்கு நீலவண்ணம் பூசி, மஞ்சளாடை அணிவித்து, பீலி சூட்டி, குழல் கையில் அளித்து தங்கள் இல்லமுற்றங்களில் விளையாடவிட்டனர். அவர்களுக்கு வெண்ணையை உண்பதற்கு அளித்தனர். வெண்ணையை உருட்டி அம்மைந்தரை எறிந்து துரத்தி விளையாடினர். மலர்மாலைகளால் மைந்தரை அடித்தும் கைகளைக் கட்டி கொண்டுவந்து உரலில் பிணைத்தும் நகையாடினர். எங்கும் சிரிப்பும் கூச்சலுமாக இருந்தது. ஒரு விண்புகுதல் அவ்வண்ணம் திருவிழாவாகக் கொண்டாடப்பட்டதை நான் முன்பு அறிந்ததே இல்லை.”
― வெண்முரசு – 26 – நூல் இருபத்தியாறு – முதலாவிண்
― வெண்முரசு – 26 – நூல் இருபத்தியாறு – முதலாவிண்
“விண்ணின் மலைமுடி என நின்ற அறம் இங்கே மண்ணில் துலாக்கோல் முள் என அலைவுறுவதை நேரில் கண்டு மீண்டான்.”
― வெண்முரசு – 26 – நூல் இருபத்தியாறு – முதலாவிண்
― வெண்முரசு – 26 – நூல் இருபத்தியாறு – முதலாவிண்
“நம்மை விட்டுச்செல்வதை நாம் துறப்பது அறிவுடைமை”
― வெண்முரசு – 26 – நூல் இருபத்தியாறு – முதலாவிண்
― வெண்முரசு – 26 – நூல் இருபத்தியாறு – முதலாவிண்
“உகந்த வாழ்வென்பது ‘போதும் இது’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொள்ளும்போது நிறைவடைவது என்பார்கள். நான் அவ்வண்ணம் போதும் போதும் என்று எனக்குள் பலமுறை சொல்லிக்கொண்டாலும் கூட ஒவ்வொரு முறையும் மெய்யாகவே அது எனக்கு போதவில்லை என்றும் அறிந்திருந்தேன். போதும் என நான் தெய்வங்களிடம் சொல்லும்போது என்னை இங்கு நிறுத்தி வைப்பதற்காக எதையேனும் அவர்கள் எடுத்துப்போடுவார்கள் என்றும் அதை பற்றிக்கொண்டு மீண்டும் வாழ்ந்துவிடுவேன் என்றும் நான் நம்புவது எனக்கு தெரிந்திருந்தது. ஏனென்றால் அது வாழ்வின் மாயம்.”
― வெண்முரசு – 26 – நூல் இருபத்தியாறு – முதலாவிண்
― வெண்முரசு – 26 – நூல் இருபத்தியாறு – முதலாவிண்
“உலகமே தன்மேல் காழ்ப்புகொள்வதை உணர்ந்தவனைப்போல தனியனும் துயருற்றவனும் வேறில்லை. தானே தன்மேல் காழ்ப்புகொண்டிருப்பதை உணர்பவன் கீழினும் கீழோன். கொடிய சாவு அது. நூறு சிம்மங்களால் கிழிக்கப்படுவது, ஆயிரம் கழுகுகளால் கொத்திச் சிதறடிக்கப்படுவது.”
― வெண்முரசு – 26 – நூல் இருபத்தியாறு – முதலாவிண்
― வெண்முரசு – 26 – நூல் இருபத்தியாறு – முதலாவிண்
“மானுட வாழ்வென்பது ஒரு பெருங்கனவு. அக்கனவு மெல்லமெல்ல கலைவதையே ஞானமென்றும் வீடுபேறென்றும் சொல்கிறோம்.”
― வெண்முரசு – 26 – நூல் இருபத்தியாறு – முதலாவிண்
― வெண்முரசு – 26 – நூல் இருபத்தியாறு – முதலாவிண்
“ஒரு பிறவிக்குள் ஏழு பிறவி எடுப்பவனே முக்தி அடைகிறான் என்று ஒரு சொல் உண்டு.”
― வெண்முரசு – 26 – நூல் இருபத்தியாறு – முதலாவிண்
― வெண்முரசு – 26 – நூல் இருபத்தியாறு – முதலாவிண்
“வெல்பவன் அறத்தோன், தோற்றவன் மறத்தோன். இதுதான் என்றும் உலகநெறி. இதுமட்டும்தான்.”
― வெண்முரசு – 26 – நூல் இருபத்தியாறு – முதலாவிண்
― வெண்முரசு – 26 – நூல் இருபத்தியாறு – முதலாவிண்
“அன்னைப் புலி தன் மைந்தரை விளையாடவிட்டு தான் பார்க்காததுபோல் திரும்பி அமர்ந்திருக்கும். அதன் வால் மைந்தருடன் வந்து விளையாடி நெளிந்து கொண்டிருக்கும்.”
― வெண்முரசு – 26 – நூல் இருபத்தியாறு – முதலாவிண்
― வெண்முரசு – 26 – நூல் இருபத்தியாறு – முதலாவிண்
“முத்துச்சிப்பிக்குமேல் கடல் வரிவடிவில் எழுதிய செய்தியையும் என்னால் படித்தறிய முடியும்.”
― வெண்முரசு – 26 – நூல் இருபத்தியாறு – முதலாவிண்
― வெண்முரசு – 26 – நூல் இருபத்தியாறு – முதலாவிண்
“ஒரு வயிற்றில் தோன்றி, ஒரு நெஞ்சில் முலையுண்டு, ஓருடலில் திகழ்ந்து, ஓரம்பில் மறைந்து, ஓராயிரம் கோடியெனப் பெருகிய கண்ணனுக்கே சரண். கருதோறும் எழுந்து, முலைதோறும் அமுதுண்டு, மடிதோறும் திகழ்ந்து, மண்ணெல்லாம் நிறைந்த மன்னனுக்கே சரண். ஆழிவெண்சங்கு அழகனுக்கே சரண்.”
― வெண்முரசு – 26 – நூல் இருபத்தியாறு – முதலாவிண்
― வெண்முரசு – 26 – நூல் இருபத்தியாறு – முதலாவிண்
“துவாபரம் கலியை முட்ட, ஆர்ப்பரித்த மாந்தர் அலைகொண்டு சூழ, விண்ணெலாம் கண்ணென்றாகி விழியிமையார் நிறைய, சொல்லெல்லாம் பொருள்மாறும் பெருங்களத்தில், பொருளெல்லாம் உதிர்ந்தழியும் குருதிப்பெருவெளியில், எழுந்த பெருஞ்சொல் அன்று திகழ்ந்த மணித்தேரே உருள்க! அறவாழியென்றே உருள்க உன் அணிச்சகடங்கள் நான்கும்!
ஏந்தாத படையாழி, இசைக்காத வேய்குழல், ஒருபோதும் உலையாத பொற்பட்டு திகழ்ந்த தேர்த்தட்டே, போருழன்ற பெருஞ்சகடே, அழியாத சொல்லெழுந்த அணிமன்றே உருள்க! செங்குருதிமேல், துயர்கள்மேல், சாவின்மேல் உருள்க! அமுதின்மேல் அழிவின்மைமேல் உருள்க! உருள்க பெருந்தேரே, இப்புவியின்மேல் சுடராழியென்றே உருள்க!
வெண்பனி மாமலைமேல் உருள்க! கங்கைமேல், காவிரிமேல் உருள்க! சிந்துவின்மேல், பிரம்மபுத்திரையின்மேல் உருள்க! விந்தியன்மேல் சஹ்யன்மேல் உருள்க! அணித்தேரே, அறத்தேரே, அழியாவேதத் திருத்தேரே, மாநதியின்மேல், துங்கையின்மேல், கிருஷ்ணையின்மேல், கோதையின்மேல் உருள்க! அலைகொண்ட கடல்சூழ தவம்கொள்ளும் கன்னியின் காலடியில் சென்றமைக! கண்ணே, தென்முனைமேல் சென்றமைக! முந்தையோர் சென்றமைந்த ஆழிப்பேராழத்தைச் சுட்டும் சிறுவிரல்நுனிமேல் அமைக! அங்கமைக கண்ணா, என்றும் அவ்வண்ணமே அமைக! ஆம், அவ்வாறே ஆம்.”

“நோயெழும் மழைமுன்காலம். நனைந்த மண்ணிலிருந்து நச்சு ஆவியெழும் பருவம். உன் கால்தொட்டுச் செல்லும் பாதைகளிலெல்லாம் மருந்தென மண்குழைக! உன் பறையோசை கேட்டு செவிமடல் மடித்து நின்றிருக்கும் கன்றுகளெல்லாம் அமுதெனச் சொரிக! பல்லாயிரம்கோடி நாவுகளுடன் சூழ்ந்திருக்கும் மரங்களெல்லாம் கேளாச் சொல்லுரைத்து வாழ்த்துக! வாழ்த்துக வெளிவானம்! வாழ்த்துக கண்ணே உன்னை அன்னை உளம்!
முகில்கணம் முழங்குக! முழங்குக மாமலைகள்! முழங்கி அலைகொள்க ஆழிப்பெருவெளி! எளியோருக்கென எழுந்த புதுவேதம் சொல்பெருக ஓங்குக உன் பறையோசை! முட்டை விரிய ஈரச்சிறகு உதறி எழுந்த சிறுகிளிக்குஞ்சு செவ்வலகு விரித்துச் சொல்லட்டும் ‘ஆகுக, ஆழிவண்ணா’ என்று. சிறுவளைவிட்டு முகம்நீட்டி ஒளிநோக்கும் முயல்குட்டி உரைக்கட்டும் ‘அவ்வண்ணமே, அணிச்சங்கனே’ என்று. தேவர்க்கிறைவனே, பனிக்குடம் உடைத்து எழுந்து தள்ளாடி நின்று நாநீட்டி இளமூக்கை நக்கி கன்று உரைக்கட்டும் ‘ஆம், அலைமலர்கண்ணா’ என்று.”

“நிலவெழுந்த முகில்நிரையில் ஒளிர்வதென்ன நகைப்பு? கருமுகிலை பொன்னாக்கும் ஒளியென்ன ஒளி? இங்கெழுந்த விழியொளியே அங்கெழுந்து அம்புலியென்றானதோ? நோக்குக விழியோனே, கைவீசி அள்ள முயல்க அங்கே பூத்தெழுந்த அப்பொன்மலரை!
தேய்வதொன்று, வளர்வதொன்று, திகழ்வதொன்று வானில். தேய்விலாது வளர்ந்தெழுந்து எந்நாளும் திகழ்வதொன்று என் கையில். ஒளிர்வதொன்று, மறைவதொன்று, முகில்திரை விலக்கி எழுவதொன்று, மண்ணெல்லாம் மிளிர்வதொன்று அவ்விண்ணில். ஒளிர்வதொன்று, என் ஆடையில் மறைவதொன்று, முந்தானை நுனிவிலக்கி எழுவதொன்று, இப்புற்குடிலும் சூழ்காடும் புவியும் பொலிய மிளிர்வதொன்று என் மடியில்.
விழிப்பீலி சுடர்கொள்ள, வீழ்நிழல் அசையாதமைய நோக்குக அந்நிலவை! தண்காற்றில் மெய்ப்படைந்த தளிருடல் மடிவெம்மை கொண்டு ஒடுங்க, தண்டைச்சிறுகால் ஒன்றின்மேல் ஒன்று அமைய, வளையணிந்த கையிரண்டும் வயிற்றின்மேல் பூண்டிருக்க, காலமில்லா கனவொன்றில் காணுக இம்முழுநிலவை! விழிப்புற்று புன்னகைத்து, அண்ணாந்து முகவாய் தொட்டுத்திருப்பி சுட்டுக அன்னைக்கு அவள் முதல் நிலவை!”

“வருக கரியோனே! நீர்வெம்மை நிறைகாற்றின் அசைவென்று. தென்மூலை வானோசையின் சிறுமுரளல் என. ஆடி திருப்பி காட்டிய ஒளிச்சுழல்போல அதிராதெழுந்தமைந்த சிறுமின்னல் என. இலையசையாது ஊழ்கமியற்றி காடு காத்திருக்கும் முதுவேனில் பெருமழையே வருக!
ஆயிரம் பல்லாயிரம் தவளைகள் வாழ்த்துரைக்க பொழியும் விரிவானே வருக! ஆயிரம் கோடி சிற்றுயிர்கள் இசைமுழக்கி எதிரேற்கும் குளிர்ப்பொழிவே வருக! ஓசையிட்டுப் பெருகியணைந்து, மண்ணறைந்து சூழத்தழுவி, துளிகோடிப் பெருகி, வீழ்கடலென்றாகி, வான்மூடி மண்மூடி நீரொன்றே என்றாகி நின்றிருக்கும் பேரளியே வருக!”
― வெண்முரசு – 26 – நூல் இருபத்தியாறு – முதலாவிண்
ஆயிரம் பல்லாயிரம் தவளைகள் வாழ்த்துரைக்க பொழியும் விரிவானே வருக! ஆயிரம் கோடி சிற்றுயிர்கள் இசைமுழக்கி எதிரேற்கும் குளிர்ப்பொழிவே வருக! ஓசையிட்டுப் பெருகியணைந்து, மண்ணறைந்து சூழத்தழுவி, துளிகோடிப் பெருகி, வீழ்கடலென்றாகி, வான்மூடி மண்மூடி நீரொன்றே என்றாகி நின்றிருக்கும் பேரளியே வருக!”
― வெண்முரசு – 26 – நூல் இருபத்தியாறு – முதலாவிண்
“கொட்டும் கைகொண்டு குவிக்கும் கைகள் பற்றி அன்னை சொல்லும் மழலைக்குச் சப்பாணி கொட்டி அருள்க! தொட்டு இதழொற்றி, மீண்டும் தொட்டு விழியொற்றி, விடாய்மீளாது அன்னை கொள்ளும் தவிப்புக்கு சப்பாணி கொட்டி அருள்க! விழிவிரித்து மகிழ்ந்து, தன் விழியெண்ணி அஞ்சி, அன்னை கொள்ளும் அலைவுக்கு சப்பாணி கொட்டி அருள்க!
கூட்டுச் சிறுகுருவிக் குஞ்சின் சிறகென எழுந்தசைக உன் கைகள்! துள்ளி வாய்விரித்து கூவிக் கரைக உன் இதழ்மலர்கள்! விடாயென்றும் பசியென்றும் விம்மி எழுக உன் சிற்றுடல்! முலையுண்டு, அன்னை உளமுண்டு, ஆழத்து கனவுண்டு, கடந்த வெளியுண்டு, உடற்கூடென்று இங்குதிர்த்து விண்ணென்றாகி எழச்செய்க! ஆயர்குலத்தெழுந்த ஆழியனே, உன் நெஞ்சிலெழுக அன்னை அனலனைத்தும் அணைக்கும் அலகிலா பெருவெள்ளக் குளிர்க்கடல்!
பாய்ந்து எழுந்து மென்தளிர் கைகளால் சூழ கழுத்தை அணைத்து, இதழ்நீர் குளிர்ந்து கன்னம்தொட முத்தமிடுக! உன் மூச்சுக்காற்றுபட்டு செவிமடல் சிலிர்க்க அன்னை அறிக சொல்லிச் சொல்லி நால்வேதமும், வேதம்கடந்த சொல்லும், வேறுஆயிரம் மெய்நூல்களும் ஆற்றிய பிழைசுட்டி நின்றிருக்கும் அறியா முழுமையை!”

“ஆயர்குடிபிறந்த அழகே, இச்சிற்றில் நிறைக்கும் ஆழிப்பால் பெருக்கின் அலையே, எழுதிசை தொட்டு விழுதிசை முட்டி மீண்டு புவியாள ஆடுக! இன்மையென்ற ஒருமுனையும் இருத்தலென்னும் மறுமுனையும் தொட்டுத்தொட்டு ஆடுக! பொருளென்று அங்கும் மயக்கென்று இங்கும் ஆகி விளையாடுக!
கூரைமூங்கிலில் கட்டிய கொடிவள்ளிக் கயிற்றில் பிணைத்த அன்னை பழஞ்சேலை குவிப்பில் கால்மேல் கால்வைத்து, நெஞ்சில் சிறுகை சேர்த்து விழிமயங்குக! இத்துணியில் எழுகின்றது அன்னையின் அடுமனை புகைமணம். அவள் உடல்கொண்ட வியர்வை வாடை. கண்வளர்க கண்ணே, அதிலுள்ளன அன்னையின் விழிநீர் வெம்மையும் நெடுமூச்செறிந்த வெதுப்பும். பறக்கும் கருவறையே தொட்டிலென்றறிக! அங்கே நீ காணும் கனவுகளில் உடன் வந்தாடும் அந்த மழலைச்சிறுமியே உன் அன்னையென்றுணர்க!
சிறுதொட்டிலாடி அமைக! சொல்லுரைத்து செயல்காட்டிச் சென்ற அரசே, இங்கு சொல்லவிந்து செயலமைந்து மயங்குக! உன் சிறுகைவிரல்கள் தளர்க! உன் தளிர்க்கால் சரிந்தமைக! நீள்பீலி நெடுவிழிகள் வளர்க! உன் முடியிலெழுந்த பீலிவிழி மட்டும் இமையாதாகுக! கண்ணே, இப்புடவிமேல் உன் நோக்கு ஒருகணமும் அணையாதாகுக!”

“செவ்விதழ் சிறுதளிர்மேல் பால்துளி எழுந்த நகைப்பு. முகிழ்த்த வேதமுதற்சொல். இது அறிதற்கொண்ணாது ஆயிரம்கோடி அருந்தவ முனிவரை அகற்றும் பெருஞ்சுடர். அள்ளி முலையோடணைத்து சின்னஞ்சிறு பண்டி தடவி சிரித்துக் குழையவைக்கும் அன்னையர் கைவிரல் கணையாழியின் சிறு மின்னொளிச்சுடர். களியாடும் கன்னியர் தோழியர் கையிலெடுத்து கழற்சியாடும் மாமலை.
முலைக்கண் முனையில் சொட்டிநின்றிருக்கும் கொழும்பால் வெண்துளி தயங்க, அன்னை குனிந்து நோக்கிக் கனியும் விழிமுனை ஒளிகொள்ள, சிறுகுமிண்வாய் விலக்கி கைவிரித்து சுட்டுவிரல் தூக்கி எதையும் சுட்டாமல் ஒலித்த முதற்சொல். சொல்லென்று திரளாத இன்பறவைச் சிற்றொலி. அன்னை நெஞ்சறிந்த பொருளனைத்தும் சென்றமையும் குளிர்மலைமுடி.
கைத்தளிர் விரித்து ஆடுக செங்கீரை! கால்மலர் கொண்டு ஆடுக செங்கீரை! சின்னஞ்சிறு நகையொலியுடன் இணையும் விழிச்சுடரொளித்துளியுடன் ஆடுக செங்கீரை! இச்சிறுகுடிலின் முன் இளங்கதிரெழும் புலர்காலையில் முதல்மலர்மணம் சூழும் மென்காற்றில் ஆடுக செங்கீரை!”

“பாலாழியின் சுழிப்பென்றெழுந்த ஆழியே, அதிலெழுந்த முத்தெனும் வெண்சங்கே காத்தருள்க! விழிகொண்ட நீலப்பீலியே, ஏழு துளைகொண்ட பொன்மூங்கிலே, கொன்றை மலர்ந்தெழுந்த பட்டாடையே காத்தருள்க! இசையில் விழிமயங்கிய கன்றே, எழுந்து குடையான அரவே, சூழ்ந்து அலைகொண்ட காற்றே காத்தருள்க என் கண்ணனை. சுடரை ஒளி என சூழ்ந்துகொள்க!
இரண்டென்று எழுந்த மயக்கே, இங்கு இன்று இவ்வண்ணமென்று அமைந்த சழக்கே, இனியென்று ஏதென்று எதற்கென்று எழுந்த துயரே, யானென்று எனதென்று எழுந்த பெருக்கே, தனியென்று சூழென்று அலைக்கும் கணக்கே, மெய்யென்று பொய்யென்று அழைக்கும் திசையே, வாழ்வென்று சாவென்று காட்டும் பசப்பே, காத்தருள்க என் மகவை! கதிரை காத்தமைவது இருளின் பொறுப்பென்று உணர்க!
சிறுதண்டை சுழன்ற மென்கால்மலரே, சற்றென விலகி விரிமலரின் முதலிதழோ எனத் தோன்றும் பெருவிரலே, இளம்பாளை தளிரென்ற பாதப்பரப்பே, அதிலெழுந்த ஆழிச்சங்குச் சுழியே, அமுதுண்ணும் களிப்பில் நெளியும் சிறுகுமிழ் விரல்களே, அமைக என் தலைமேல்! அமைக இப்புவிமேல்! அமைக திருமகள் மடிமேல்! அமைக இக்ககனவெளிமேல்! அமைக காப்பென்று அமைக!”

“உலகறிந்து எழுந்தவர் ஒருங்குணர்ந்து உய்ந்திடும் ஒரு பொருள் நீ’ என்றழைத்த சிறுகரிச்சான் பைதலே, பாடுக மைநீலம் விலக்கி மணித்தளிர் விழித்துக்கொள்ள மால்திகழ் பெருஞ்சோலை அறிந்த குழலிசையின் இனிமையை. அவன் நீலமலர்க் காலடி படிந்த பூம்பொடிப் பொன்பரப்பே கூறுக, நீ கொண்ட மெய்விதிர்ப்பின் குளிரை. மணிக்கழுத்து மரகதப் புறாத் தொகையே சாற்றுக அவன் மயிற்பீலி நலுங்கலில் எழுந்த நீலவிழி நகைப்பை.
கானுறைவோய்! கடலுறைவோய்! வானுறைவோய்! வளியுறைவோய்! எங்குளாய் இலாதவனாய்? இறையோய்! இங்குளாய்! கண்ணானாய்! காண்பதானாய்! கருத்தானாய்! காலமானாய்! கடுவெளியானாய்! கடந்தோய்! கருநீலத் தழல்மணியே! வானெழுந்த சுடரொளியே! காட்சியில் கண்ணே, கண்ணில் கருத்தே, கருத்தில் மெய்யே, மெய்யென்றானவனே, மெய்கடந்துறைபவனே.”
― வெண்முரசு – 26 – நூல் இருபத்தியாறு – முதலாவிண்
கானுறைவோய்! கடலுறைவோய்! வானுறைவோய்! வளியுறைவோய்! எங்குளாய் இலாதவனாய்? இறையோய்! இங்குளாய்! கண்ணானாய்! காண்பதானாய்! கருத்தானாய்! காலமானாய்! கடுவெளியானாய்! கடந்தோய்! கருநீலத் தழல்மணியே! வானெழுந்த சுடரொளியே! காட்சியில் கண்ணே, கண்ணில் கருத்தே, கருத்தில் மெய்யே, மெய்யென்றானவனே, மெய்கடந்துறைபவனே.”
― வெண்முரசு – 26 – நூல் இருபத்தியாறு – முதலாவிண்
“ஆம், இதுவே இப்பெருங்காவியத்தின் நிறைவாகும். மானுடர் உணர்ந்தவை அனைத்தையும் கூறுவது. மானுடர் சென்ற வழிகள் அனைத்தையும் ஆராய்வது. மானுடருக்கு தெய்வங்கள் அளித்தவை அனைத்தையுமே தொட்டுச் செல்வது. இது மானுட விழைவுகளின், அச்சங்களின், பிழைகளின் கதை. மானுட வெற்றிகளின், கடத்தல்களின், நிறைவுகளின் கதை”