Periyar > Quotes > Quote > Nocturn liked it

Periyar
“பெண்கள் பிள்ளை பெறும் தொல்லையில் இருந்து விடுதலையாக வேண்டும் என்கின்ற மார்க்கத்தைத் தவிர - வேறு எந்த வகையிலும் ஆண்மை அழியாது என்பதோடு, பெண்களுக்கு விடுதலையும் இல்லை என்கின்ற முடிவு நமக்கு, கல்லுப்போன்ற உறுதியுடையதாய் இருக்கின்றது. சிலர் இதை இயற்கைக்கு விரோதமென்று சொல்ல வரலாம். உலகத்தில் மற்றெல்லாத் தாவரங்கள், ஜீவப் பிராணிகள் முதலியவைகள் இயற்கை வாழ்வு நடத்தும் போது மனிதர்கள் மாத்திரம் இயற்கைக்கு விரோதமாகவே அதாவது பெரும்பாலும் செயற்கைத் தன்மையாகவே வாழ்வு நடத்தி வருகின்றார்கள். அப்படியிருக்க இந்த விஷயத்திலும் நன்மையை உத்தேசித்து இயற்கைக்கு விரோதமாய் நடந்து கொள்வதால் ஒன்றும் முழுகிப் போய்விடாது.

தவிர, பெண்கள் பிள்ளை பெறுவதை நிறுத்திவிட்டால், ‘உலகம் விருத்தியாகாது, மானிட வர்க்கம் விருத்தியாகாது’ என்று கர்ம நியாயம் பேசச் சிலர் வருவார்கள். உலகம் விருத்தியாகாவிட்டால் பெண்களுக்கு என்ன கஷ்டம் வரும்? மானிட வர்க்கம் பெருகாவிட்டால் பெண்களுக்கு என்ன ஆபத்து ஏற்பட்டுவிடக் கூடும்? அல்லது இந்தத் ‘தர்ம நியாயம்’ (அதாவது மக்கள் பெருக்கமடையாவிட்டால்) பேசுபவர்களுக்குத்தான் என்ன கஷ்டம் உண்டாகிவிடும் என்பது நமக்குப் புரியவில்லை. இதுவரையில் பெருகிக் கொண்டு வந்த மானிட வர்க்கத்தால் ஏற்பட்ட நன்மைதான் என்ன என்பதும் நமக்குப் புரியவில்லை.”
Periyār, பெண் ஏன் அடிமையானாள்?

No comments have been added yet.