Thakshila Swarnamali > Quotes > Quote > Andavar liked it

“மேரி, தன்னுடைய காதணிகள் இரண்டையும் எனது கைகளில் திணித்துப் பொத்திய மேரி, அதற்குச் சில தினங்களுக்குப் பிறகு செத்துப் போய்விட்டாள். தம்பியையும் தம்பி தேடிய விடயங்களையும் தேடிக் கண்டுபிடிக்க முன்பே மேரி செத்துப் போயிருந்தாள். மகள் அழவில்லை. இறுதித் தருவாயில் வழங்கப்பட்ட, கட்டிலினருகே வைக்கப்பட்டிருந்த ஒட்சிசன் சிலிண்டரை, வெற்று பிளாஸ்மா பாக்கற்றை, கடைசிச் சிறுநீர் நிரம்பிய பையை கோபத்தோடு பார்த்திருந்தாள். அனைத்தையும் மகள் கோபத்தோடு பார்த்திருந்தாள். மகள் அழவில்லை. எனது செல்ல மகள் அழவேயில்லை. ‘அம்மா இறந்து போனதை அறிந்து கொண்டேன்’ என மருத்துவமனைக் குறிப்பேட்டில் எழுதிக் கொடுத்த மகள், மேரியின் அருகிலேயே அமர்ந்திருந்தாள் நான் வரும்வரைக்கும்.”
Thakshila Swarnamali, அந்திம காலத்தின் இறுதி நேசம்

No comments have been added yet.