Su. Venkatesan > Quotes > Quote > Nirmal liked it

Su. Venkatesan
“வீழ்ச்சிக்குப்பின் எவ்வளவு காலம் நிலைத்திருந்தாலும் கோட்டை அதன் அர்த்தத்தை ஓரு சிறு கல்லில் கூட தக்கவைத்துக் கொள்வதில்லை. அது அதனது அர்த்தத்தையும் அவசியத்தையும் ஒருபோதும் தான் தீர்மானிப்பதும் இல்லை. எதிரிகளால் நாற்புறமும் சூழப்பட்ட நிலையில் உட்பகுதியில் இருக்கும் பதற்றத்தையும், பயத்தையும் அது உணர்ந்ததுமில்லை. அவர்களின் பசியை அது அறியாது. முற்றுகையைக் கண்டு அது அஞ்சியதில்லை. வீழ்த்தப்பட்ட பின் சிதைந்துபோன நெடுங்கதவுகளின் வழியே வெட்டுண்ட தேகங்களை இழுத்துக்கொண்டு கரிய இரத்தம் வெளியேறும் போது அதைக் கண்டுகொண்டதுமில்லை. ஏதோ ஒரு மலைப்பகுதியில் இருந்து தன்னைச் செதில் செதிலாக வெட்டி எடுத்து வந்து இங்கே அடுக்கி வைத்தவர்களின் மீது அதற்குக் கோபம் இல்லை; ஆதரவு காட்டவும் தெரியாது. அது வெறும் கல் அவ்வளவுதான்.
மனிதன் தான் அதன் மீது கனவு காண்கிறான். கட்டியெழுப்புகிறான். ஏதேதோ செய்து அதன் பின்னால் ஒளிந்து கொள்ளப் பார்க்கிறான். செதுக்கி வழிபடுகிறான். நம்பி வரம் பெற விழைகிறான்.”
Su. Venkatesan, காவல் கோட்டம்

No comments have been added yet.