Su. Venkatesan > Quotes > Quote > Nirmal liked it
“புதிய படகைத் தண்ணீரில் இறக்குவதைப்போல கிராமங்கள் ஒவ்வொன்றாய் பெரியாற்று நீரில் இறங்கின. நீரோடு வாழப்பழகுதல் எளிதன்று. நீர் அவர்களுக்குள் இறங்கிப் பாய்ந்து கசிந்தபடி இருந்தது. நீரின் குணம் படியப்படிய மனிதனுக்குள் விளைச்சல் ஆரம்பித்தது. சம்சாரித்தனத்தின் உயிரே நிலத்தில் பயிர் விளையும்பொழுது மனத்துக்குள்ளும் அது விளைவதுதான்; நிலத்தில் பயிர் வாடும்போது மனதுக்குள் உயிர்வாடுவதுதான். நிலத்தின் கண்ணாடியாக மனித உடல் மாறிவிடுகிறது. நிலம் போர்த்திய பேருடலுடன் அலையும் மனிதர்கள் பயிர்களின் வேர்களை நரம்புகளெனத் தங்களுக்குள் ஊடுருவ விட்டுவிடுகின்றனர். பச்சைப் பயிர் வளர்ந்து, பரிய ஆரம்பித்து, பால்பிடித்து, முத்துமுத்தாக விளைந்து வயலிலே சாய்ந்து படுத்துறங்கும் காலத்திற்குள் விதவிதமான மன உணர்வுகளால் உருமாறியபடியே இருக்கின்றனர். பாய்ச்சிய நீரில் விளையும் பயிர் நிலத்தில் மட்டும் விளைவதில்லை. வேளாண்மை எங்கு நடக்கிறது என்பது ஒரு மர்ம விளையாட்டாகவே இருக்கிறது. இயற்கையின் பேரதிசயங்களுக்குள் கால் நனைத்து சம்சாரி வயல்வெளியெங்கும் நடந்து திரிகிறான்.”
― காவல் கோட்டம் [Kaaval Kottam]
― காவல் கோட்டம் [Kaaval Kottam]
No comments have been added yet.
